சீறிய சிறுத்தையால் சிதறுண்ட பசு ! நீலகிரியில் நடந்த பரிதாபம்!

உள்ளூர் செய்திகள் தமிழகம் பொது தகவல்கள்

chitta - 2026நீலகீரி மாவட்டம் நெலாக்கோட்டை அருகே பசு மாட்டை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெலாக்கோட்டை அருகே உள்ள மேல்ராக்வுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் மணிகண்டனுக்கு சொந்தமான பசு மாடுகள் வழக்கம்போல் மேய்ச்சலுக்கு சென்றன. பின்னர் மாலையில் அவை வீடு திரும்பின. ஆனால் 4 வயது பசு மாடு மட்டும் வீட்டுக்கு வர வில்லை. இதனால் மணிகண்டன் அந்த பசு மாட்டை தேடிச் சென்றார்.

அப்போது மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர்கள் ராமகிருஷ்ணன், நந்தகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் நந்தினி வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.cow crop e1564038167492 - 2026அப்போது சிறுத்தைப்புலி கடித்து பசு மாடு இறந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட மணிகண்டன் இழப்பீடு தொகை வழங்குமாறு வனத்துறையிடம் கோரிக்கை விடுத்தார். உரிய ஆவணங்களை சமர்ப்பித்த உடன் நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சிறுத்தைப்புலி கால்நடைகளை மட்டுமின்றி வளர்ப்பு பிராணிகளான கோழி, நாய்களையும் கடித்து கொன்று வருகிறது. பொதுமக்களும் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது.

எனவே கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் சுமேஸ் சோமன் உத்தரவுப்படி 3 கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் அப்பகுதியில் பொருத்தி வைத்து சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.