நாட்டுக்குள் வேட்டை காட்டுக்குள் வாழ்க்கை ! பிடிபட்ட பித்தலாட்ட ஆசாமி !

Published:

kallaru - 2026நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. இங்குள்ள கோரக்கநாதர் கோயிலுக்கு போக வேண்டுமானால் கல்லாற்றை கடந்துதான் போக வேண்டும். பௌர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டுமே இங்கு போக வனத்துறை அனுமதி தரும்.kallaru1 1 - 2026இந்தக் கல்லாற்றின் பக்கத்தில் ஒரு ஓலை குடிசை இருந்தது. நைட் நேரத்தில் இங்கு நடமாட்டம் தெரியவும், இங்கெல்லாம் வரக்கூடாது  என்று எச்சரித்து வனத்துறை ஊழியர்கள் அவரை விரட்டி உள்ளனர். ஆனாலும் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. அதனால் வனத்துறையினர் ரகசியமாக அந்த நபர் யார், எதற்காக இங்கு வந்து போகிறார் என்பதை கண்காணித்தனர்.supramani - 2026பிறகு கையும் களவுமாக பிடித்து நடத்திய விசாரணையில், காட்டுக்குள் குடிசை அமைத்து தங்கி வருபவர் சுப்பிரமணியன் ,இவர் விருத்தாசலம் அடுத்த ஐவதகுடி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிவந்தது. இவரது பொழப்பே, மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து, ரயில்களில் கொள்ளை அடிப்பதுதானாம்.kaithu e1563169848461 - 2026அழுக்கு சட்டை, அழுக்கு காவி வேஷ்டிதான் இவரது மாமூலான ஆடை. முகத்தில் ஒரு சோகத்தோடு வலம் வருவார்.  எந்த ரயில் வருமோ அதில் சுப்பிரமணி ஏறி கொண்டு, பிச்சை எடுப்பார். கம்பார்ட்மென்ட்டில் தனியாக பெண்கள் மட்டும் இருந்தால் செயினை பறித்துக் கொண்டு ஓடிவிடுவார்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

இப்படி கொள்ளையடித்த பணத்தில் கஞ்சா அடிப்பார், பெண்களை காட்டுப்பகுதி குடிசைக்கு இரவு நேரங்களில் அழைத்து வந்து தங்குவார். இப்படியே 5 வருஷம் ஓடியிருக்கிறது. பகலில் கொள்ளை, இரவில் ஆட்டம் என வாழ்ந்து வந்த சுப்பிரமணி, இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

 

Related articles

Recent articles

spot_img