13 மாவட்டங்களில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா! முதல்வர் ஆலோசனை!

Published:

edappadi pazhanisaamy
edappadi pazhanisaamy

13  மாவட்டங்களில் கொரோனா மின்னல் வேகத்தில்  பரவிவருகிறது 

சென்னைக்கு அடுத்தபடியாக, மதுரை, திண்டுக்கல், வேலுார், கோவை, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, துாத்துக்குடி,கன்னியாகுமரி ஆகிய, 13 மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியில், அசுர வேகத்தில் பரவ வாய்ப்புள்ளது என பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர், டாக்டர் குழந்தைசாமி எச்சரித்துள்ளார்

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த நர்சிங் படிக்கும் மாணவிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது இதனிடையே அந்த. நர்சிங் படித்த மாணவி ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வந்ததாக விசாரணையில் கூறியதால் பரபரப்பு.ஏற்பட்டுள்ளது 

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவில்பட்டியை சேர்ந்த பெண் இன்று மதியம் உயிரிழந்தார்.

கோவில்பட்டியை சேர்ந்த 56 வயது மதிக்கதக்க பெண் சில தினங்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்புடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை சிகிச்சை செய்ததில் கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. 

ALSO READ:  செல்போனுக்குத் தடை; கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தண்டனையா?

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு நர்ஸிங் மாணவிக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இந்நிலையில், தேனியில் இன்று மாலை முதல் முழு ஊரடங்கு என்று  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னதாக இன்று காலை  மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு குறித்து பேசப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை  கூறப் பட்டது. இதனால், பாதிப்பு அதிகமாகும் மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவெடுக்க  வாய்ப்பு ஏற்பட்டுள்ளது 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரை தொடர்ந்து மதுரையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது 

* திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் திடீரென அதிகரிக்கும் பாதிப்பு பிரித்து பேசப்பட்டுள்ளது மேலும்   திண்டுக்கல், ராணிப்பேட்டை, வேலூரில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

இதை அடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்கும் பாதிப்பு குறித்தும்  அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் இன்று ஆலோசிக்கப் பட்டது.

Related articles

Recent articles

spot_img