சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்! எடப்பாடி அறிவிப்பு!

கோவை சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
mettupalayam accident - 2026

கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்தப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்றனர். உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 17 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் மற்றும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

edappadi pazanisamy - 2026

சுற்றுச்சுவர் கட்டிய சிவசுப்பிரமணியன் கைது செய்யப்படிருக்கிறார். சட்டரீதியாகவே இந்த விவகாரத்தை அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

mettupalayam accident1 - 2026

ஏற்கெனவே ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ரூ.6 லட்சம் வழங்கப்படும்… வீடு இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் . இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.