பூட்டிய கோவிலுக்குள் சுவர் ஏறிக் குதித்து ‘ஜாலி’யாக இருந்த ‘ஜோடி’! விரட்டிய மக்கள்!

கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Dharapuram Uthira Veeraraghava Perumal Temple DharapuramErode TamilNadu - 2026

பூட்டிய கோவிலுக்குள் கும்மாளமிட்ட காதல் ஜோடியை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர். இதனால் பயந்து போன அவர்கள் இருவரும் சுவர் ஏறிக் குதித்து தப்பியோடினர்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள கிருஷ்ணன் கோவில் பூட்டப்பட்டிருந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளது.

வெகுநேரமாக அவர்கள் வெளியே வராதால்,  மக்கள் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, கோவில் பூட்டைத் திறந்து கோவிலுக்கு உள்ளே பொது மக்கள் சென்ற போது அங்கே இளம்  காதல் ஜோடி சில்மிசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு சத்தம் போட்டுள்ளார்.

மேலும், ஊர்ப் பொது மக்கள் சிலரும் கோவிலுக்குள் வந்து அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது, மக்களிடம் இருந்து தப்பிக்க, கோவிலின் மதில் சுவரில் ஏறி, வயல் பகுதிக்குள் குதித்து  அந்த ஜோடி தப்பிச் சென்றது. கோவிலை எதற்கெல்லாம்தான் பயன்படுத்துகிறார்கள் என்று பொதுமக்கள் திட்டித் தீர்த்தனர். இது தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 thought on “பூட்டிய கோவிலுக்குள் சுவர் ஏறிக் குதித்து ‘ஜாலி’யாக இருந்த ‘ஜோடி’! விரட்டிய மக்கள்!”

  1. எல்லா மத போதகா்களும் வளிபாட்டு தலத்தை சல்லாபம் அனுபவிக்க பயன் படுத்தும் பொழுது இளசுகள் பயன்படுத்தினால் என்ன தவறு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.