உடுமலை அருகே அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கோவை சற்றுமுன் சுற்றுலா லைஃப் ஸ்டைல்

thirumoorthimalai panchalinga falls - 2026

உடுமலை அருகே உள்ளஅமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு … ஒரு வாரத்தில் மூன்று அடி நீர் மட்டம் உயர்வு!

குளிர்கால மழை மற்றும் கோடைமழை கைவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளஅமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்தில், மூன்று அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு பருவ மழைகள் ஏமாற்றியதால், அணை நீர்மட்டம் சரிந்து, கடந்த நான்கு மாதமாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

இந்தாண்டு, குளிர்கால மழை மற்றும் கோடை மழை ஏமாற்றியதால், அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 25 அடியாக காணப்பட்டது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், தென் மேற்கு பருவ மழை துவங்கி, தீவிரமடைந்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து, கடந்த வாரத்தில்,28 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 3 அடிவரை உயர்ந்து 31 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, நீர்மட்டம் 90அடிக்கு -31 அடியாகவும், அணைக்கு வினாடிக்கு, 57கன அடி நீர் வரத்தும் உள்ளது. . பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகையில்,’ கடந்த ஆண்டு, கோடை மழை நல்ல முறையில் பெய்ததோடு, தென்மேற்கு பருவ மழையும் முன்னதாக துவங்கியதால், ஜூன் மாதம், 65 அடி வரை நீர் மட்டம் இருந்தது.

இந்தாண்டு, கடந்த, 10 நாட்களாக, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்தால், கடந்தாண்டை போல படிப்படியாக நீர் வரத்து அதிகரித்து அணை நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நம்பிக்கை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.