மதுரை அழகர் கோவிலில், செயற்கையாக அமைக்கப்பட்ட நீர் நிலையில் நேற்று, தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி, அழகர் இறங்கினார்.
மதுரையில் உள்ள அழகர் கோயிலில் வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனுமதியின்றி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 4.30..மணிக்கு மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை நகரில் லேசான மழை பெய்தது.
மதுரை நகரில் வெள்ளிக்கிழமை மாலை லேசான மழை பெய்தது. ஆண்டுதோறும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கிய பிறகு மாலை வேளையில் மழை பெய்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இதேபோல், இந்த ஆண்டு வைகையாற்றில் அழகர் ஆற்றில் இறங்காமல், கோயில் வளாகத்தில் அழகர் இறங்குதல் நிகழ்ச்சி நடந்த நிலையில், மதுரை நகரில் லேசான மழை பெய்தது.
மதுரை அழகர் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடைபெற்றது. ஆண்டுதோறும் மதுரையில் வைகை ஆற்றில் இந்த வைபவம் நடைபெறும். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்தார். துர்வாச முனிவரின் சாப விமோசனத்துக்காக ஆண்டுதோறும் இந்த வைபவம் நடந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊரடங்கால், மதுரை சித்திரை திருவிழா இந்த வருடம் தடைப்பட்டது. எனினும், ஆகம முறைப்படி, முக்கிய நிகழ்வான மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சிகள், அழகர்கோவில் வளாகத்தில் நேற்று நடந்தன.
காலை, 8:00 மணிக்கு கள்ளழகர் கண்டாங்கி பட்டு அணிந்து, எதிர்சேவை அலங்காரத்தில் காட்சியளித்தார்.
கோவில் வளாகத்தில் செயற்கையாக அமைக்கப்பட்ட நீர்நிலையில் பச்சைப்பட்டு அணிந்து, தங்கக் குதிரை வாகனத்தில், காலை, 10:00 மணிக்கு கள்ளழகர் எழுந்தருளினார், மாலை, 4:30 மணிக்கு கருட வாகனத்தில் கள்ளழகர், மண்டூக முனிவருக்கு மோட்சம் அளித்தார். பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை
- செய்தியாளர் : ரவிச்சந்திரன், மதுரை