ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய திருவிழா கோலாகலம்!

Published:

edakanathar temple function - 2026
#image_title

சோழவந்தான்: மதுரை, திருவேடகம் ஏலவார்க் குழலி அம்மன் சமேத ஏடகநாத சுவாமி கோவிலில் ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன் சமேத, ஏடகநாதர் சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி
அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும்.

7-ம் நூற்றாண்டில் சங்கம் தமிழ் வளர்த்த மதுரையில் சமண சமயத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த சமணர்கள் வசம் அப்போது, மதுரை ஆண்ட கூன்பாண்டியனும் நின்றசீர் நெடுமார பாண்டியனும் சிக்கி அந்த சமயத்தினை பின்பற்ற சைவ சமயம் மீண்டும் தலைத்தோங்குவதர்க்கும் தமிழ்நெறி வளரவும் பாண்டியனின் மனைவியான மங்கையற்கரசியார் எனும் தீவிர சிவ பக்தை சீர்காழியில் இருந்து தெய்வ குழந்தையான திருஞானசம்பந்தரை, மதுரைக்கு அழைத்து வந்து பாண்டிய மன்னனின் மனதை மாற்றியும்
வெப்பு நோயை தீர்த்து வைத்தும் சமணர்களை அனல் வாதத்தில் வென்று புனல் வாதத்தில் திருப்பாசுர ஏட்டினை வைகை ஆற்றில் விட்டு அது வைகை ஆற்றினை எதிர்த்து வந்து வெற்றி பெற்ற இடமான திருஏடகத்தில் அந்த வைபவத்தை நினைவூட்டும் வகையில் நேற்று இரவு ஏடு எதிரேறிய திருவிழா நடந்தது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இந்த திருவிழாவை முன்னிட்டு, கோவிலில் இருந்து
விநாகர் முன்வர திருஞானசம்பந்தருடன் நின்றசீர் நெடுமார பாண்டியனின் தலைமை அமைச்சரான குலச்சிரை நாயனாருடன் வந்து ஞானசம்பந்தர் திருப்பாசுர ஏடினை எடுத்து செல்லும் வைபவமானது கேடயத்தில் விநாயகர் குதிரை வாகனத்தில் ஏடகநாதர் மற்றும் கேடயத்தில் திரு
ஞானசம்பந்தர் இவருடன் வைகை ஆற்று வாழ்க அந்தணர் என்ற வாசகம் குறித்த கரையில் உள்ள திருஞானசம்பந்தர் செப்பு தகட்டில் உள்ள ஏடு சன்னதியிலிருந்து, வாழ்க அந்தணர் என்ற செப்பு தகட்டில் ஆன ஏடு அலங்காரமாகி வைகையாற்றின் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.

இங்கு ஓதுவார் ஸ்தலத்திலேயே ,ஏடு எதிரேறிய வரலாறும் பக்தி பாடலுடன் எடுத்துக் கூறினர். நேற்று மாலை கன மழை பெய்த நிலையில் கனமழையிலும் பக்தர்கள் கூட்டத்தில் வைகை ஆற்றில் தண்ணீரில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது.

பின்னர், பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினார்கள். கோவில் செயல் அலுவலர் சரவணன், பரம்பரை அறங்காவலர் சேவுகன் செட்டியார், கோவில்
பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர்,
சிவனடியார் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

கொட்டும் மழையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு  செய்திருந்தனர்.

Related articles

Recent articles

spot_img