Dhinasari Home page

இரிடியம் முதலீட்டில் இரட்டை லாப ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி; 3 பேர் கைது!

மதுரை கிரைம் நியூஸ் சற்றுமுன்
Dhinasari Home page

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்து விசாரணை – இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் அதிமுக நிர்வாகியும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரான பட்டுராஜன்(52,) அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஆரம்பித்து இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பணத்தை இழந்த வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பன் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் அதிமுக நிர்வாகிகளான பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகிய மூவர் மீதும் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இருடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன் சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளர், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.