தயவுசெய்து உயிர் காக்கும் மருந்தை வீணடிக்காதீர்!

Published:

nayanthara
nayanthara

தமிழகத்தில் தடுப்பூசிகள் மீண்டும் வீணடிக்கப்படுகிறதா ?

இன்று 20.5.21 ல் திருநெல்வேலி டவுண் பாட்டப்பத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில்… காலை 11 மணிக்கு இரண்டாவது டோஸ் போட சென்ற போது நீங்கள் எப்போது முதல் ஊசி போட்டீர்கள் என்றனர்

ஏப்ரல் 10 என கூறினேன். 84 நாட்கள் கழித்து தான் அடுத்து தடுப்பூசி இப்போது போட முடியாது என கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

vaccine nellai1
vaccine nellai1

90 நாட்கள் வரை போடலாம் என்று தான் மத்திய அரசு சொல்லியுள்ளதே தவிர 84 நாட்கள் கழித்து தான் போட வேண்டும் என சொல்ல வில்லையே என கேட்டதற்கு அது இணையத்தில் பதிய முடியாது என கூறிவிட்டனர்.

ஏப்ரல் 10ல் முதல் தவனை ஊசி போடும் போது 28 நாள்கள் கழித்து 2வது தடுப்பூசி போட சொன்னார்கள்

மே முதல் வாரத்தில் கேட்ட போது 40 நாட்கள் கூறினர். இன்று 84 நாட்கள் என்கின்றனர்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று இன்று கேட்ட போதும் அதே பதிலை சொல்லி திருப்பி அனுப்பினர்

அதெல்லாம் சரி ……..

ஆனால் இன்று மதியம் 2மணி வரை பாட்டபத்து PHC ல் இன்று 12 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது

நெல்லை பேட்டையில் 9 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. ஒரு ஊசி பாட்டிலில் பத்து பேருக்கு போடலாம் என கூறுகின்றனர்.

அப்படியால் மருந்து வீணாக தானே போகிறது.

அதை எனக்கு செலுத்தி இருக்கலாமே. வீணாய் போகும் மருந்தை யாராவது ஒருவருக்கு பயண்படுத்தலாமே

என்னை போல் எத்தனை பேர் இப்படி திரும்பி சென்றார்களோ ?

vaccine nellai2
vaccine nellai2

எனக்கு முன்னால் 45 வயதிற்கு குறைவான ஒரு இளைஞன் ஊசி போட நின்றான். அவனிடமும் 45வயதிற்கு மேல் தான் முதல் தவனை ஊசி என பாட்டபத்து PHC ல் திருப்பி அனுப்பினர்

ஊசி போடுங்கள் என விளம்பரம் செய்தால் போதாது. அதை வீணாகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இதில் எங்கே சரி செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக அரசும் நெல்லை மாவட்ட நிர்வாகமும் சிந்திக்க வேண்டும்

தயவு செய்து உயிர் காக்கும் மருந்தை வீணடிக்காதீர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இது குறித்து பரிசீலிக்க வேண்டுகிறேன்.

  • கா.குற்றாலநாதன், நெல்லை

உங்கள் புகார்களையும் பதிவு செய்யுங்கள்…

Related articles

Recent articles

spot_img