பாபநாசத்துக்கு பஸ் சரியா வர்றதில்ல…! அதுவும் இரவு நேரம்னா…

Published:

sandeepnaduri nellai busstand - 2026

பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் PP பேருந்து பாபநாசம் வருவது கிடையாது. சில சமயங்கள் வி.கே.புரத்தில் திருப்புகின்றனர். இதனால் பொதிகையடி டாணா மக்கள் சிரமப்படுகின்றனர்

21/09/18 அன்று பாபநாசத்தில் மாலை 6:30க்கு வர வேண்டிய pp பேருந்து 7:30 ஆகியும் வரவில்லை. பின்பு | மணி நேரம் கழித்து SF Sல் ஏறி பயணம் செய்தேன். இதை யாரும் கண்டு கொள்வதில்லை .

அதே போன்று திருநெல்வேலி To பாபநாசம் வரும் போது அம்பை பஸ் ஸ்டாண்ட் வருவது கிடையாது வெளியே ஆட்களை இறக்கிவிட்டு செல்கின்றனர். உள்ளே வருவது கிடையாது. இதனால் வயதானவர்கள் மற்றும் குழந்தை வைத்து இருப்பவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

ஆகவே PP பேருந்து அம்பை பஸ் ஸ்டாண்ட் உள்ளே வந்து பாபநாசம் செல்ல அறிவுறுத்தும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்ளப்படுகிறது. மேற்படி பாபநாசம் மற்றும் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலும் கால அட்டவணை வைத்தால் நன்றாக இருக்கும். பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்..

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

நன்றி!!

-வாசகர்

Related articles

Recent articles

spot_img