விடுமுறை முடிந்து விடுதி திரும்பிய கல்லூரி மாணவி தற்கொலை

Published:

death hang - 2026

நாகர்கோவில் : விடுமுறை முடிந்து விடுதி திரும்பிய கல்லூரி மாணவி தற்கொலை – காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் விடுமுறை முடிந்து கல்லூரி மாணவிகள் பலர் விடுதிக்கு திரும்பியுள்ளனர்.

இதேபோல ஒசூரை சேர்ந்த மாணவி தனுஷியாவும் விடுதிக்கு திரும்பிய நிலையில், மதிய இடைவேளை நேரத்திலும், விடுதியை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள், ஜன்னல் வழியாக பார்த்தபோது, மாணவி தனுஷியா துப்பாட்டாவில் தூக்கு மாட்டிய நிலையில், அவர் சடலமாக கிடந்தார்.

தகவல் அறிந்து வந்த நேசமணி நகர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவி மரணத்திற்கான காரணம் குறித்து, உறவினர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img