கரூரில் அமைச்சர் முன்னிலையில் திமுக.,விலிருந்து விலகி அதிமுக.,வில் இணைந்தவர்கள்!

திருச்சி லைஃப் ஸ்டைல்
mrvijayabhaskar
mrvijayabhaskar

கரூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் திமுகவினர் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள் 

கரூர் தெற்கு நகர திமுக மாணவர் அணி துணை அமைப்பாளர் 46 வது வார்டு கே.எம்.எஸ்.பாலு, அக்கட்சியில் இருந்து விலகி கரூர் தெற்கு நகர செயலாளர் வி.சி.கே. ஜெயராஜ் தலைமையில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலருமான, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், தங்களை அ.இ.அ.தி.மு.க வில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். 

இந்த நிகழ்வின் போது, அதிமுக.,  நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

joining admk
joining admk

இதேபோல், கரூர் சட்டமன்ற தொகுதியை சார்ந்த கார்த்திக், ஸ்ரீராம், பிரசாந்த், அருள் கண்ணன், ஜெயந்த், ரூபேஸ், தீபக், கிஷோர், கவி உள்ளிட்ட இளைஞர்கள் கரூர் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலருமான, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில், தங்களை அ.இ.அ.தி.மு.க வில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.