
தமிழகத்தில் இன்று 2,532 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு தகவல்கள்…
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 2532 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . தமிழகத்தில் 5ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 59 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 59,377ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. சென்னையில் கொரோனா தொற்று பாதிப்பு 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது! சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,172ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில், 53 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1438 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்

தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 757ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32,754ஆக உயர்ந்துள்ளது.
வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 52 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டிருக்கிறது. மலேசியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 5 பேருக்கு கொரோனா உறுதியானது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக, சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 120 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 64 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப் பட்டது.