“சீயக்காய் கலந்த கஞ்சியை குடித்த சிவபெருமான்”………. ஹரதத்தர் விழா : 24-1-15…..கஞ்சனூர் கற்பகாம்பாள் உடனுறை அக்னீஸ்வரர் திருக்கோயில்…..கும்பகோணத்திற்குக் கிழக்கில் 18 கி.மீ தொலைவிலும் மயிலாடுதுறைக்கு மேற்கில் 18 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது… “கருக்கோடி நீப்பார்கள் சேரும் கஞ்சனூர்” என்கிறது பெரியபுராணம்…இத்தல ஈசன் திருநாவுக்கரசரால் “மதிசூடும்பெருமான்” எனப்போற்றப்படுகிறார்.இவரே சுக்கிர தோஷ பரிகார மூர்த்தியாவார்.காவிரி நதியானது உத்தரவாஹிணியாகப் பாயும் இந்த புண்யத்தலம் கம்ஸபுரம் பலாசவனக்ஷோத்திரம் ஆகும்.சிவத்தலங்களில் மிக உயர்ந்த இத்தலம் கிருதயுகத்தில் புன்னாகவனம் என்றும், திரேதாயுகத்தில் கதளீவனம் என்றும் த்வாபரயுகத்தில் வில்வ வனம் கலியுகத்தில் பலாசவனம் என்றும் வழங்கப்படுகிறது. பராசர முனிவரின் சித்தப்ரமை நிவர்த்தியானதும், அக்னி பகவான் பாண்டு நோய் தீரப்பெற்றுதும், கம்ஸராஜன் நோய் நீங்கி சுகம் பெற்றதும், சந்திரன், சித்திரசேனன், இந்திரன் ஆகியோரின் பாவங்கள் நீங்கியதும் காளகண்டன் என்ற வேடன் மோக்ஷம் அடைந்ததும், விஷ்ணு முதலான தேவர்கள் சுக்கிரதோஷம் நீங்கி சுகபோகங்கள் பெற்றதுமான இத்தலமே மிகச்சிறந்த திருத்தலம் ஆகும். இங்குள்ள வடகாவிரியில் ஒரு முறை நீராடினால் கங்கை நதியில் பன்னிரெண்டு முன்னோர்களுக்கான நீததார் கர்மங்கள் காசியில் செய்வதற்கு ஒப்பாகும் . இங்கு முன்னர் பதினான்கு கோத்திரத்தில் உதித்த வைணவர்கள் இருந்தனர். தீவிர வைணவர்களாகிய அவர்கள் வேதங்களில் மிகவும் போற்றப்படுபவர் மஹாவிஷ்ணுவே எனக்கூறி சிவநிந்தனைகளையும், சிவனடியார்களுக்கும் சிவாலயத்திருவிழாக்களுக்கும் பல இடையுறுகளையும் செய்து வந்தனர். இந்நிலையைப்போக்கி அவர்களுக்கு சிவபரத்துவத்தை உணர்த்த எண்ணிய விஷ்ணுவானவர் காசியப கோத்திரத்தில் வாசுதேவர் என்ற வைணவருக்கு மகனாப்பிறந்தார்.சுதர்சனர் என்று பெயரிடப்பட்ட அக்குழந்தை பேசத் தொடங்கியதுமே “சிவ சிவ” என்றது. தந்தை வாசுதேவர் பலமுறை கண்டித்தும் கேளாமல் சிவனடியார்களுடன் சேர்ந்து சிவநாம பஜனை செய்வதும் திருநீறு அணிந்து கொண்டு அருகில் உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயத்தை வலம் வருவதாக இருந்தது. ஒருநாள் அக்னீஸ்வரர் ஆலயத்தில் சுதர்சனர் ஈசனை மனதில் தியானித்து இருந்தார். அப்போது அத்தல ஈசன் அக்னீஸ்வரர் அக்குழந்தைக்கு தக்ஷிணாமூர்த்தி வடிவில் காட்சி தந்து சகல வேதம்களையும் தர்ம சாஸ்திரத்தையும் உபதேசித்து ஹரததத்ர் என்ற நாமத்தையும் சூட்டினார். சகல ஞானமும் பெற்ற ஹரதத்தர் மறுநாள் வேதங்களையும் சாஸ்திரங்களையும் மேற்கோள்காட்டி “சிவனே பரம்பொருள்” என்று தனது தந்தையிடம் வாதம் செய்தார். ஹரதத்தரின் வாதத்தை ஏற்க மறுத்த வாசுதேவர் அவரைக்கொல்ல நினைத்து ஹரதத்தரை நோக்கி,” நீ கூறுவது உண்மையென்றால் நெருப்பில் காய்ச்சிய இரும்பு பீடத்தின் மீது நின்று “சிவனே பரம்பொருள்” என சத்தியம் செய்து சொல்ல வேண்டும் எனக்கூற ஹரதத்தரும் சம்மதிக்கவே, பண்டிதர்களும் சைவ வைணவ அடியார்களும் அருகில் இருக்க நெருப்பிலிடப்பட்டு செம்மை நிறத்தில் தகிக்கும் இரும்பு பீடத்தின் மீது நின்று “”சிவனே பரம்பொருள்”‘என சத்தியம் செய்து கூறினார். அவரை அந்த நெருப்புஇல் இட்ட இரும்பு பீடம் சுட வில்லை …மாறாக ஈசன் அருளால் தகிக்கும் அந்த நெருப்புஇல் இட்ட இரும்பு பீடம் ஹரததரை குளிர்வித்து நின்டது. அப்போது தேவர்கள் பூமாரிப்பொழிய அக்னீஸ்வர சுவாமி அன்னை கற்காம்பிகையுடன் ஹதத்தருக்கு காட்சி தந்தார். இன்றும் கஞ்சனூர் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் அக்னீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக கற்காம்பாளுடன் காட்சி தருகின்றார். அவருக்குப்பக்கத்தில் சைவஸ்தாபனம் செய்யும் கோலத்துடன் ஹரதத்தரின் திருவுருவமும் உள்ளது குறிபிடத்தக்கது.. ஹரதத்தர் ஒருமுறை சீயக்காயுடன் வடிகஞ்சியும் எடுத்துக்கொண்டு காவேரி நீராடச்சென்றார். அப்போது வயது முதிர்ந்த சிவனடியார் வேடம் கொண்ட அக்னீஸ்வரப் பெருமான் ஹரதத்தரிடம் மிகவும் பசியாயிருக்கிறது என்று கூற ஹரதத்தரும் தன்னிடம் இருந்த கஞ்சியை அவருக்கு அளிக்க அச்சிவனடியாரும் அதை வாங்கி அருந்தினார்.அகமர்சனம் செய்து எழும்பிய ஹரதத்தர் கஞ்சியில் சீயக்காய் கலந்திருப்பது நினைவில்லாமல் முதிய சிவனடியாருக்கு அளித்து விட்டதை எண்ணி வருந்தி அவரின் உடல்நலத்திற்கு தீங்கு வராதிருக்க ஈசனை தியானித்தார் .அக்னீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் பூஜைகளில் பலவகையான நிவேதனமும் சிவனடியார்களுக்கு அன்னதானமும் செய்து வரும் சிவலிங்கபூபதி என்ற மன்னனின் கனவில் தோன்றிய ஈசன் “மன்னா!உனது நிவேதனமும் அன்னதானமும் நம் ஹரதத்தரின் கஞ்சிக்கு ஈடாகாது” என்று கூறி மறைய ,மன்னன் ஹரத்ததரைப் பணிய ,இருவரும் இணைந்து அப்பன் ஈசனை பணிய ஈசனின் அருள்மழை பெய்ய தொடங்கியது .ஆம்! அன்றில் இருந்து இன்றுவரை தம்மை நாடிவருவோரின் இல்லங்களில் சுக்கிர திசையை பாய்ச்சி செல்வமும்,நல் உடல்நலமும் தம் அடியவர்களின் இல்லங்களில் நிறைய அருள்மழையை கஞ்சனூரில் பாய்ச்சி வருகிறான்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
மதுரை
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.
மதுரை
உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

