பம்பரமாய் சுற்றியவர்… பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார்: ஆசிரியரைப் பார்த்து ஐபிஎஸ் அதிகாரி பட்ட வேதனை!

Reporters Diary அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
sylendrababu visited teacher - 2026

உடல் நலமின்றிக் கிடக்கும் தன் ஆசிரியையைச் சென்று பார்த்து ஆறுதல் சொல்லி வந்த ஐபிஎஸ் அதிகாரி சைலேந்திரபாபுவுக்கு டிவிட்டர் பதிவில் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.

படித்து முடித்து பெரிய அளவுக்கு வளர்ந்துவிட்டால், தன்னை வளர்த்து விட்டவர்களை கண்டுகொள்ளாமல் சாய்ஸில் விட்டுவிடுவதுதான் உலக இயல்பாகிப் போயுள்ளது. ஆனால் வெகு சிலரே, தாம் ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்காமல், அழகுபடுத்திப் பார்க்கிறார்கள். அத்தகைய உணர்வைப் பிரதிபலித்திருக்கிறார் ஐபிஎஸ் அதிகாரியான சைலேந்திர பாபு தனது டிவிட்டர் தளத்தில்!

ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி. பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறக்க முடியாது. Visited my teacher Sadanathavalli, now in bed. She transformed me. – என்று அவர் செய்த பதிவுக்கு… பலரும் தங்களது வாழ்த்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!
https://twitter.com/SylendraBabuIPS/status/1227155589026869248

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.