friend - 2026

நண்பனின் திருமணத்திலே கைவரிசை காட்டிய நண்பன்!

லைஃப் ஸ்டைல் பொது தகவல்கள்
friend - 2026

பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

உலகம் முழுவதும் திருட்டு சம்பவங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. திருடர்கள் ஒவ்வொரு முறையும் திருடுவதற்கு பல புதிய வழிகளை கையாள்கின்றனர்.

திருட்டு தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் வெளியிடப்பட்டு, வைரலாகி வருகின்றன.

சில சமயங்களில் திருடர்கள் பிக் பாக்கெட் மூலம் பணத்தை எடுத்துச்செல்கிறார்கள். சில நேரம் நம் அருகிலேயே நின்றுகொண்டு விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச்செல்கிறார்கள்.

தற்போது மீண்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதில் மணமகனின் நண்பரே திருமணத்தில் மணமகனிடம் திருடுவதை காண முடிகின்றது. இந்த வீடியோ பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த அதிர்ச்சி வீடியோவில் ஒரு திருமணம் நடப்பதை காண முடிகின்றது. மணமகனுக்கு அருகில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமர்ந்துள்ளனர்.

மணமகனின் நண்பர் ஒருவர் அவருக்கு மிக அருகில் அமர்ந்திருக்கிறார். மணமகன் கழுத்தில் பண மாலை இருப்பதும் வீடியோவில் தெரிகிறது.

மணமகன் அருகில் உள்ள நண்பனுக்கு அந்த பண மாலையே குறியாக இருக்கிறது. பண மாலையில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை திருட அவர் பல முறை முயற்சிக்கிறார்.

இறுதியில் அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார். மணமகனின் மிகவும் நெருங்கிய நண்பர் அவரது திருமணத்திலேயே அவரது பணத்தை திருடிய இந்த சம்பவம் கேமரா-வில் கைதாகியுள்ளது.

திருமணத்தில் மணமகனின் நண்பரே மணமகனின் பணத்தை திருடுவது எங்குமே நடக்காது. வினோத நிகழ்வின் இந்த வீடியோ meemlogyandghantaa என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.

‘இப்போது இந்தப் பணத்தைக் கொண்டே சீர் செய்வாரா?’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘ நண்பன் கிட்டயே கைவரிசயா?’ என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.