IMG 20230329 WA0073 - 2026

புனலூர் -இடமன், பகவதிபுரம்-விருதுநகர் மின் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது…

Reporters Diary அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் நெல்லை
IMG 20230329 WA0073 - 2026
#image_title

புனலூர் -இடமன், பகவதிபுரம்-செங்கோட்டை-ராஜபாளையம்-விருதுநகர் மின்மயமாக்கல் ரயில் சோதனை ஓட்டம் முடிந்தது .

விருதுநகர் – ராஜபாளையம் – தென்காசி – செங்கோட்டை – பகவதிபுரம் & இடமன் – புனலூர் இடையே ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
இதற்கான மின்சார இன்சின் பொருத்திய ரயில் சோதனை ஓட்டம் இன்று மாலை கேரளாவில் புனலூர் இடமன் இடையேயும் தமிழ்நாட்டில் பகவதிபுரம் – விருதுநகர் இடையேயும் தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளர் திரு .சித்தார்த்தா , மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் அதிகாரிகள் குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இதன் முதல் அங்கமாக இன்று காலை விருதுநகரிலிருந்து டீசல் இன்சினால் இயக்கப்பட்ட சிறப்பு சோதனை ரயில் ஆங்காங்கே ரயில் நிலையங்களிலும் பிற இடங்களிலும் நிறுத்தப்பட்டு சித்தார்த்தா ஆனந்த் குழுவினர் சார்பில் மின் இணைப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

IMG 20230329 WA0021 - 2026
#image_title

இலஞ்சி – மதுரை சாலை ரயில் கேட்டில் சோதனையை முடித்த பிறகு இந்த ரயில் பகல் 12.13க்கு செங்கோட்டை ரயில் நிலையத்தின் இரண்டாம் நடைமேடையை வந்தடைந்தது.

ரயிலில் இருந்து ஆய்விற்கு இறங்கிய முதன்மை மின் பொறியாளரையும் மதுரை கோட்ட மேலாளரையும் வரவேற்றனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

இந்த சிறப்பு ரயில் 12.19க்கு
செங்கோட்டையிலிருந்து (பகவதிபுரம் ஆரியங்காவு தென்மலை இடமன் வழி)புனலூருக்கு புறப்பட்டு
சென்றது.

புனலூர் முதல் இடமண்‌வரை மின்சார இன்ஜின் மூலம் ரயில் தண்டவாளத்தில் ஆய்வும்‌ மின் சப்ளை மற்றும் மின் போல்களின் தரம் உட்பட பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு ரயில் பகவதிபுரம் வந்தடைந்தது.

இன்று மாலை 6.30 மணி அளவில் பகவதிபுரத்தில் இருந்து விருதுநகர் வரை மின்சார இன்சின் பொருத்திய சிறப்பு ரயில் சோதனை ஓட்டம் முதன்மை தலைமை மின் பொறியாளர் திரு.சித்தார்த்தா & மதுரை கோட்ட மேலாளர் திருஆனந்த் மற்றும் அதிகாரிகளால் துவக்கப்பட்டு விருதுநகர் வரை ஆய்வுகளை நடத்தினர்.

தற்போது ராஜபாளையம் சோழபுரத்தில் மின் உபநிலைய பணிகள் இறுதியாக நடந்து வருவதால் விருதுநகர் உப மின்நிலையம் மூலம் மின் சப்ளை விருதுநகர் தென்காசி வழியில் கிடைக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.