தமிழக அரசாங்கத்தின் நிதிநிலையை பற்றி கவலைப்படாத முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published:

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளதாவது:-

இதுவும் ஒரு 110 அறிவிப்பு. ‘‘மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பத்துலட்சம் கடன் கொடுக்கப்படும். அதில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும்’’ என்று 2011 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இன்னும் அது நிறைவேறவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுத்த வாக்குறுதியையே காப்பாற்றாதவர், ஆட்சி போகும் நிலையில் கொடுக்கும் வாக்குறுதியை எப்படி காப்பாற்றுவார்?

தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது மகளிர் சுயஉதவிக் குழுக்களை தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. இப்போது தேர்தல் வருகின்ற காரணத்தால் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கைபேசி என்று அறிவிக்கிறார். தேர்தல் நாடகத்தை தொடங்கி விட்டார். இனி எஞ்சியிருக்கின்ற நாட்களில் இது போன்ற அறிவிப்புகளுக்கு பஞ்சமிருக்காது.

சட்டமன்றத்திற்கு அரை மணி நேரம் வரும் ஜெயலலிதா தேர்தல் அறிவிப்புகளை வெளியிடத்தான் வருகிறார். ஏற்கனவே மாநில நிதி நிலைமை மோசம். 2.11 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருக்கிறது. நிதி நிலைமை பற்றி கவலைப்படாமல் ஜெயலலிதா 110 அறிவிப்புகளை வெளியிடுகிறார்.

இதுவரை அவர் அறிவித்த பல அறிவிப்புகள் ‘‘வெற்று அறிவிப்புகளாகவே’’ கடந்துபோயிருக்கின்றன. இந்த அறிவிப்பும் கடந்து போகும்.

1989-ல் மகளிர் சுயஉதவிக்குழுக்களை உருவாக்கியது தி.மு.க. அரசு. அவர்களுக்கு கடன் கொடுத்தால் தானே கைபேசி பயன்படுத்த முடியும். முதலில் சுயஉதவிக் குழுக்களுக்கு தேர்தல் அறிக்கையில் சொன்னபடி கடன் கொடுக்கட்டும். பிறகு கைபேசி கொடுக்கலாம் என மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளர்.

 

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img