பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணை ஒரு தனியார் பஸ் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சுக்குள் இழுத்துச் சென்று, நேற்றிரவு கொடூரமாக கற்பழித்து, சீரழித்த சம்பவம் பெரும் பரபரப்பை உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இங்குள்ள ஜான்சி மாநிலம், கோத்வாலி பகுதியில் நேற்றிரவு சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சில் இருந்து இறங்கிய டிரைவரும், கண்டக்டரும் அந்தப் பெண்ணை பலவந்தமாக இழுத்துச் சென்று, பஸ்சில் வைத்து கற்பழித்தனர்.

அவர்களிடம் இருந்து விடுபட அந்தப் பெண் போட்ட கூச்சலை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்த பஸ்சுக்குள் ஏறினர். அங்கு அலங்கோல நிலையில் கிடந்த பெண்ணை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர்கள், அந்த தனியார் பஸ் டிரைவர் பிரிஜேந்திரா, கண்டக்டர் ஜிதேந்திரா ஆகியோரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending