15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி 3½ லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்த போராட்டம்

Published:

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த குழுவினர் உயர்நிலைக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் அக்டோபர் 8–ந்தேதி திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் தொடக்க கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை உள்ள 3.5 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img