தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி வட்டம் மோலையானூர் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் தலைமைச் செயலகம் வந்து மனு கொடுத்தார். அதில் உயர் கல்வித்துறை அமைச்சர் மீது புகார் கூறப்பட்டு இருந்தது.

மனு கொடுத்த பின் கவிதா திடீர் என்று தலைமைச் செயலக 4–ம் நம்பர் நுழைவு வாயில் அருகில் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்தப் பெண்ணை காப்பாற்றி அழைத்துச் சென்று விட்டனர். இந்தசம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending