சட்டசபை தேர்தலில் 90 சதவீத’கிரிமினல்’கள் வேட்பாளர்களாக களத்தில் குதிப்பு

Reporters Diary

 

சாமானிய மக்களுக்கும் சரிசமமான உரிமைகளும் சுயமரியாதையும் கிடைக்க வேண்டும்.என்பதற்காகத் தான் ஜனநாயகத்தையே நமது முன்னோர்கள் கொண்டு வந்தனர். ஆனால், இப்போது ‘கிரிமினல்’களின் கையில் சிக்கிக்கொண்டு ஜனநாயகம் படாதபாடு படுகிறது என்பதற்கு உதாரணம் தான் பீகார் மாநிலம்.

நடக்க இருக்கும் பீகார் சட்டசபை தேர்தலில் களம் இறங்கி உள்ள வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் மீது ‘கிரிமினல்’ வழக்குகள் உள்ளன. அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடக்கப்போகும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதம் பேர் ‘கிரிமினல்’கள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

மொத்த வேட்பாளர்களில் 99 பேர் மீது தீவிரமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும் 30 பேர் மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி கொள்ளையடித்தல் போன்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.