வீடில்லாதவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல சொல்லும் பெண் கவுன்சிலர்

Reporters Diary

வீடில்லாதவர்கள் கொஞ்சம் பைத்தியமாக இருப்பதால் அவர்கள் மீது அன்பு காட்டி அவர்களுக்கு விஷ ஊசி போட்டுவிடலாம், என மெக்சிகோ நாட்டின் ப்யூப்லா மாநிலத்தில் உள்ள டெக்கமாச்சல்கோ நகர கவுன்சிலர் சமீபத்தில், தெரிவித்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இப்பகுதி கவுன்சிலரான ஒல்கா கித்தேரேஸ் மாக்கோரோ என்ற பெண்மணி, ‘வீடில்லாதவர்கள் இல்லாமலிருக்க, ‘நமக்கு தீங்கு விளைவிக்காத வீடிழந்தோருக்கு பரிவு காட்டி அவர்களை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக இப்பகுதி நாளிதழில் செய்தி வெளியானது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையால், அனைத்து தரப்பில் இருந்தும் இவருக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து தனது பேச்சுக்கு ஒல்கா மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இதில், கொடுமை என்னவென்றால், ஒல்கா நலிவடைந்த பிரிவினருக்கான ஆணையத்தின் தலைவராவார்.

இதுபோன்ற சாலையோரம் வசிக்கும் மக்களில் சிலர் மனநல நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டு, அதற்கான சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் முக்கியச் சாலையின் நடுவில் அடிபட்டுச் சாவதற்காக விடப்படுகின்றனர் என்றும் ஒல்கா குற்றம் சாட்டியுள்ளார். பெண் கவுன்சிலர் பேச்சால் தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.