பனை மர கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு : தமிழ்நாடு கள் இயக்கம்

பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு அளிப்தாக தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது .

தமிழகத்தில் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு கள் இயக்கம் பிரசார சார்பாக பல மாவட்டங்களில் பேரணி தொடர்ந்து நடத்த திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பேரணி கன்னியாகுமரி மாவட்டம் காந்தி மண்டபத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது. தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமையிலான குழுவினர் வேன் மூலம் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை நெல்லை வந்த அந்த பேரணியில் பங்கு பெற்ற
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்த பல அரசியல் கட்சிகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள், பொதுமக்கள் என பலர் கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.

இந்த சமுதாயத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கு முக்கியக் காரணமே மதுதான். பண்டிகை நாட்களில் இத்தனை கோடிக்கு மது வியாபாரம் நடந்ததாக அறிக்கை கொடுக்கும் அரசு, அதன் பின்னணியில் எத்தனை பெண்களின் கண்ணீர் இருக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

இந்த நிலையில் கள் ஒரு போதை பொருள் அல்ல. அது ஒரு உணவு பொருள். சுத்தமான கள்ளை போதை பொருள் என நிரூபித்தால் நாங்கள் ரூ.10 கோடி பரிசாக தருகிறோம்.

கேரளாவில் சுண்ணாம்பு சேர்க்காத பதனீரில் இருந்து சர்க்கரை தயாரிக்கின்றனர். பனைக்கு யாரும் பூச்சி மருந்து அடிப்பதில்லை. எனவே பனை பொருட்களில் எந்த வித நச்சும் இல்லை. அது கிலோ ரூ.400க்கு விற்பனையாகிறது. மேலும் இலங்கையில் இருந்து கள் மூலம் தயாரித்த பீர், ஒயின், விஸ்கி ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கள் இறக்க அனுமதித்தால் அதுபோல் நாமும் தயாரித்து அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நியசெலவானி ஈட்டலாம்.

கன்னியாகுமரியில் இன்று தொடங்கிய எங்கள் பிரசார பயணம் வருகிற அக்டோபர் 2–ந் தேதி சென்னை காந்தி சிலை முன்பு நிறைவு பெறுகிறது. அப்போது காந்தி சிலைக்கு கள் படையல் செய்து வழிபடுவோம் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்.

கள் இயக்க பிரசாரத்தின் போது பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் மூலம் வெளிநாடுகளில் தாயரிக்கப்பட்டு விற்பனையாகும் பீர், ஒயின், விஸ்கி பாட்டில்கள் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது குறிப்பிடதக்கது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Entertainment News

Popular Categories