திருமாவளவனின் தில்லையம்பதி விஸிட்! தீட்சிதர்களை மட்டும் ஏன் குறை சொல்லவேண்டும்!?

Published:

IMG 20190330 WA0008 - 2026

திருமாவளவன் சிதம்பரம் கோயிலுக்குள் போனதில் சில சந்தேகங்கள்..!

அவர் பகலில் கோவிலுக்குப் போனாரா.. இல்லை நடு இரவு பொது மக்கள் யாருமில்லாத போது கோவிலுக்குள் போனாரா..?

பகலில் போனதாகத்தான் தெரிகிறது. அப்போது கூட எத்தனை ஜாதிக்காரர்கள், அந்தக் கோவிலில் இருந்தார்கள்..? எத்தனை பேர் அந்த திருமாவளவனின் சட்டையைப் பிடித்து… சனாதன தர்மம் ப்ராடுன்னும், சனாதன தர்மம் தீவிரவாதம்னு பொதுக் கூட்டம் நடத்திட்டு இப்ப இங்க எதுக்குடா வந்தேன்னு கேட்டார்கள்..?

ஏதோ கோயிலுக்குள் வந்துவிட்டாரென்று புளகாங்கிதம் அடைந்து, தீட்சிதர்கள் தான் விபூதி பூசிவிட்டார்கள் என்றால்… மானங்கெட்டவனே எதுக்குடா அதை நீ பூசிகிட்ட என்று எத்தனை பேர் கேட்டார்கள்…?

ஒரு மருத்துவமனை என்று இருந்தால், பிடித்தவன், பிடிக்காதவன் எல்லாரும்தான் வருவார்கள். சொந்த மருத்துவமனையாகவே இருந்தாலும் ஒரு தனிப்பட்டவனை எனக்குப் பிடிக்கல்லை என்று மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று எந்த டாக்டருக்கும் சொல்ல முடியாது.

அப்படி இருக்க.. கோவில் என்பது பொது. யாருக்கும் சொந்தமில்லை. யார் வேண்டும் என்றாலும் ஹிந்துவாக இருந்தால் உள்ளே வரலாம்.

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

அந்தத் திருமாவளவன்  நான் ஒரு ஹிந்து என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். அப்படி இருக்க அங்கே பணி செய்யும் தீட்சிதர்கள் மட்டும் அவரை எதிர்த்தால்.. வன் கொடுமை சட்டத்தில் அவர்கள் மீது வழக்கு போடமாட்டாரா என்ன..? அல்லது தன்னை தடுத்ததைச் சொல்லியே அரசியல் செய்ய மாட்டாரா என்ன!? திருமாவளவனைத் தூண்டி விட்டு கோயிலுக்குச் செல் என்று சொல்பவர்கள் எதிர்பார்ப்பதும், தீட்சிதர்கள் தன்னைத் தடுக்க வேண்டும் என்பதுதானே!

ஆக நீங்கள் எல்லாருமே முடிவு செய்துவிட்டீர்கள்… கோவில் தீட்சிதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாட்டிவிட்டு அவர்கள் சிறைக்குச் செல வேண்டும் என்று!

இப்படித்தான் திருமாவளவனின் கூட்டம் ரொம்ப நாட்களாகவே மற்ற ஹிந்துக்களை தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்…. அதற்கு மற்ற ஹிந்துக்களும் பலியாகி தீட்சிதர்களையும் அவர்களின் உருவத்தையும் கூடித் திட்டித் தீர்க்கிறார்கள்!

சனாதன தர்மம் என்ன தீட்சிதர்களுக்கும் மற்ற ஐயர்களுக்கும் மட்டும் பட்டயம் வைத்து சாசனம் எழுதப் பட்டிருக்கிறதா?! அதன் பாதுகாவலர்கள்  ஒட்டு மொத்த ஹிந்துக்கள்தானே!

– பிரேமா எஸ். ஐயர்

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img