கோவை சிறுமி கொலையில்… கொலையாளியின் டீஷர்ட் காட்டிக் கொடுத்ததாம்! போலீஸார் தகவல்!

Published:

coimbatore girl murdercase - 2026

தமிழகத்தையே உலுக்கிய கோவை துடியலூர் P.S 7 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கோவை மாவட்ட போலீஸார் அதிரடி விசாரணை மூலம் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸார் அளித்த தகவல்:

கோவை மாவட்டம் துடியலூர் அருகில் பன்னிமடை என்னும் கிராமத்தில் 25.03.2019 ம் தேதி மாலை 1800 மணிக்கு தனது வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமி காணாமல் போய் விட்டாள். இது தொடர்பாக அன்று இரவே துடியலூர் கா.நி வழக்குப் பதிவு செய்து தேடி வந்த நிலையில் அடுத்த நாள் அச்சிறுமியின் வீடு அருகே சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஒரு துப்பும், தடயமும் கிடைக்காத நிலையில் பல்வேறு அமைப்புகள் காவல் துறையை கண்டித்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் போலீஸ் உயரதிகாரிகளின் உத்தரவின் பேரில், 10 தனிப்படை அமைக்கப்பட்டது.

சிறுமி கொலை வழக்கில் எவ்விதமான தடயமோ, CCTV காட்சிகள் ஏதும் இல்லாத மிகவும் சிக்கலான இந்த கொலை வழக்கில் தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் சிறுமியின் உறவினர்கள், நண்பர்கள், அடுத்த வீட்டில் இருப்பவர்கள் என பல்வேறு இடங்களில் இடங்களில் விசாரணை மேற்கொண்டதின் பலனாக தனிப்படையினருக்கு கிடைத்த ஒரு சிறு தடயத்தை ( சிறுமியின் பிணம் சுற்றி வைக்கப்பட்ட குற்றவாளியின் TShirt) வைத்து சிறுமியின் வீட்டுக்கு அருகில் அடிக்கடி வந்து செல்லும் Santhosh kumar (34) S/o. Kanagaraj, Thondamuthur, Covai.என்பவனை பற்றிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனிப்படையினர் அவனை கண்காணித்து வந்து ஓரிடத்தில் இருந்து பிடித்து இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

அதில் தனக்கு திருமணமாகி ஆகி விட்டதாகவும் தனக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டு மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சம்பவத்தன்று தான் மது அருந்தி விட்டு தனது பாட்டி வீட்டுக்கு சென்று தனது Cellphoneல் ஆபாசம் படம் பார்த்து கொண்டிருந்த போது தனது பாட்டியின் வீட்டிற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்து விட்டு பாட்டியின் வீட்டில் பழைய பொருட்கள் உள்ள இடத்தில் சிறுமியின் உடலை மறைத்து வைத்து விட்டு தான் வெளியே சென்று விட்டு வந்த போது தனது பாட்டி வீட்டில் இரந்து விட்டதாகவும் தனது பாட்டியின் வீடு சிறியதாக இருந்தால் உறவினர்கள் வந்து பார்க்க வேண்டி பாட்டியின் உடலை வெளியே எடுத்து வைத்து விட்டு அனைவரும் வந்த பிறகு பாட்டியின் உடலை அடக்கம் செய்து விட்டு தான் தனது பாட்டியின் வீட்டுக்கு வந்து பாட்டியின் பழைய பொருட்களை வெளியே கொண்டு போய் போடுவது போல சிறுமியின் உடலை ஒரு T Shirt துணியால் சுற்றி சிறுமி வீட்டின் பக்கத்தில் உள்ள குறுகிய சந்தில் கொண்டு போய் போட்டு விட்டு யாருக்கும் சந்தேகம் வராத போல நடந்து கொண்டதாக கூறினான்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

தனிப்படையினரின் தொடர் விசாரணையில் குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான். எந்த ஒரு CCTV பதிவுகளோ, சாட்சியங்களோ, தடயங்களோ இல்லாத இந்த வழக்கில் தொடர் விசாரணையின் மூலம் குற்றவாளியை கண்டு பிடித்து கைது செய்து தமிழக காவல் துறைக்கு இந்திய அளவில் கோவை மாவட்ட போலீஸார் பெருமை சேர்த்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img