அடிவாரத்தில் சமைத்து சதுரகிரி மலை மேல் கொண்டு செல்வது சாத்தியமற்றது! இந்து தமிழர் கட்சி கண்டனம்!

Reporters Diary ஆன்மிகச் செய்திகள் புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

sathuragiri mahalingam - 2026

சதுரகிரி மலையில் அன்னதான உணவுக் கூடங்களுக்கு தடை விதித்துள்ளதற்கு இந்து தமிழர் கட்சி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது குறித்து அதன் நிறுவனர் தலைவர் ராம.ரவிக்குமார் வெளியிட்ட அறிக்கையில்…

சதுரகிரிமலை அன்னதான உணவு கூடங்களுக்கு தடை_ மலையில் இருக்கும் உண்டியலுக்கு தடை இல்லையா? “சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில் அன்னதான மடங்கள் செயல்பட விதித்த தடையை நீக்கிட வேண்டும்” நெறிமுறை படுத்துங்கள். இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிமன்றத்திற்கும் இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோள்

சித்தர்கள் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் அருள்மிகு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் சிவனடியார்கள் மலையில் ஏறி, இயற்கை காற்றை சுவாசித்து, தெய்வீக அனுபவங்களை உணர்ந்து சந்தன மகாலிங்கத்தையும் சுந்தரமகாலிங்கம் தெய்வத்தை வணங்கி வருவது காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை .

இந்த பக்தியோடு ஆன்மிக யாத்திரை மேற்கொள்ளக்கூடிய பக்தர்கள் மலைப்பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மலையேறி செல்வதற்கு தடை விதித்தனர்.

தற்போது சதுரகிரி மலையில் செயல்படக்கூடிய பக்தர்களுக்கு அன்னம் பாலிப்பு செய்யக்கூடிய அன்னதான மடங்களை சுற்றுச்சூழலை காரணம் காண்பித்து செயல்படுவதற்கு நீதிமன்ற உத்தரவுகளை காரணம் காட்டி மூட நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை எடுத்திருக்கிறது.

sathuragiri - 2026

இது இந்து பக்தர்களுக்கு சிவனடியார்களுக்கு செய்யக்கூடிய சிவதுரோகம் –
அன்ன துரோகம் இந்த அடாத செயலை இந்து தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. காரணம் சிவனருளை வேண்டி மலையேறி வந்து ஆன்மிக யாத்திரை மேற்கொள்ள கூடிய அடியவர்களுக்கு உணவுக்கு என்ன ஏற்பாடு மேலே செய்ய முடியும்?

இது சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் திரு ஆர் பச்சையப்பன் அவர்கள் கூறும்போது ” ஒரு தனிநபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . கோயிலுக்கு அருகில் செயல்படக்கூடிய அன்னதானம் மடங்களால்
சமையல் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சொல்லுகிறார்.

அதே நேரத்தில் அடிவாரத்தில் சமைத்து கோவிலில் அன்னதானம் வழங்க தடை இல்லை என்றும் சொல்கிறார். சரி தனியார் மடங்கள் அன்னதானம் செய்தால் சுற்றுச்சூழல் கெடுகிறது என்று சொல்லக்கூடிய இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும்,வழக்கு தொடர்ந்த வரும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் அன்னதான கூடங்களை
கட்டி ஏன் அன்னதானம் வழங்க கூடாது?

அடிவாரத்தில் உணவு சமைத்து மலையேறி உணவு வழங்குவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. மிகுந்தசிரமங்களை உருவாக்கும். இது மலையேறி வந்து சிவதரிசனம் செய்யக்கூடிய சிவனடியார்களை குறைந்த அளவில்மலை செல்வதற்கு வழிவகை செய்யக் கூடியதாகவே அமையும்.

இது சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வர் , மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக பக்தர் களின் நலன்கருதி ஏற்பாடு செய்திட இந்து தமிழர் கட்சியின் சார்பில் வேண்டுகோளை முன்வைக்கிறோம். உணவு கூடங்களை மேலே இருக்க தடைவிதித்து நடவடிக்கை
எடுக்கக் கூடிய அறநிலையத்துறை அடிவாரத்தில் உணவு சமைக்கலாம் என்ற அறிவுரை வழங்கியது . எந்த அளவில் பொருத்தமான  வாதம் என்று தெரியவில்லை.

அப்படியானால் மலையிலே இருக்கக்கூடிய உண்டியலை ஏன் இடமாற்றம் செய்யக்கூடாது? உணவு வழங்க தடை உண்டிலுக்கு மட்டும் அனுமதி ! இது எந்த வகையில் நியாயம்?-என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.