கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைத்தால் மட்டுமே தேர்தலில் போட்டி; டிடிவி.தினகரன் அறிவிப்பு.!

Published:

06 Aug13 TTV Dinakaran - 2026

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அமமுக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்

ஏற்கனவே நடந்த முடிந்த வேலூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுவதை தவிர்த்து வந்த நிலையில், தற்போதும் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து திமுக, அதிமுக கட்சிகள் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பை காட்டி வருகிறது.

ttv dinakaran - 2026

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற 18 சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, அமமுக பெரும் தோல்வி அடைந்த நிலையில் அதன்பிறகு நடைபெற்ற தேர்தலைகளை சந்திக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

டிடிவி.தினகரனின் இந்த அறிவிப்பு அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டா்களை மிகவும் சோர்வடைய செய்வதாக புலம்பி வருகின்றனா்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

Related articles

Recent articles

spot_img