ஆணிற்கு கர்ப்ப பரிசோதனை! அதிரவைத்த மருத்துவர்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
dr1 - 2026

ஜார்கன்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றார் ஆண் நோயாளி ஒருவர். அவருக்கு கர்ப்ப பரிசோதனை செய்யச் மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் கஞ்சு என்பவர் வயிற்றுவலி ஏற்பட்டு அதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு ஒருசில பரிசோதனை செய்யுமாறு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் முகேஷ் குமார் சீட்டு எழுதி கொடுத்துள்ளார்.

pragnent - 2026

அந்த சீட்டை எடுத்துக்கொண்டு ஆய்வகத்திற்கு சென்று லேப் டெக்னீஷியனிடம் காட்டியுள்ளார். மருத்துவர் எழுதி கொடுத்த அந்த சீட்டை பார்த்து லேப் டெக்னீஷியன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அதில் பெண்களுக்கு செய்யப்படும் கர்ப்ப பரிசோதனை செய்யுமாறு எழுதப்பட்டிருந்தது.

அதிர்ச்சியடைந்த கோபால் கஞ்சு மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மருத்துவர் முகேஷ் குமார் மறுத்துள்ளார் என தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.