தென்காசி மாவட்டத்தில்… ராம.கோபாலன் அஞ்சலிக் கூட்டங்கள்!

Published:

tenkasi
tenkasi

இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் செப்டம்பர் 30 ஆம் தேதி காலமானார். அவருக்கு இந்து முன்னணி அமைப்பினர் பல்வேறு இடங்களில் அஞ்சலி கூட்டங்கள் நடத்தினர் 

தென்காசி மாவட்டத்தில், வாசுதேவநல்லூர் ஒன்றியம் மற்றும் நகர இந்து முன்னணி சார்பாக ராம.கோபாலன் அவர்களுக்கு அஞ்சலி  செலுத்தும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பிஜேபி ராமராஜா  மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டித்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்

kadayam-hm
kadayam-hm

தென்காசி ஒன்றியம் இந்து முன்னணி சார்பில்  தடை மீறி ஊர்வலம் நடத்தப் பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களை 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி காவல் துறை கைது செய்தது. 

கடையம் ஒன்றிய இந்துமுன்னணி பேரியக்கத்தின் சார்பில் ஆழ்வார்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் வீரதுறவி ராமகோபாலன் அவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தப்பட்டது ….  இந்த நிகழ்ச்சியில் கடையம் ஒன்றியம் கடையம் மாநகர்  பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து இந்து பரிவார் அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..

vkpudurs
vkpudurs

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில், பேருந்து நிலையம் அருகே அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில்,  M.P.சாக்ரடீஸ் இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு மாவட்டத்தலைவர் S. சுடலையாண்டி BJP மாவடட செயற்குழு உறுப்பினர்    P. மாரியபபன் BJP ஒன்றிய தலைவர்M.பேச்சிமுத்து ஒன்றியBJP துணைத் தலைவர்  S.திருமலை இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் A.கண்ணன் இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் T.ராஜேஷ் மாவட்ட BJP இளைஞரணி தலைவர் V.G. விஜயசேகர் மாவட்ட BJP விவசாய அணி பொதுச்செயலாளர் P.பால சுப்பிரமணியன் BJP ஒன்றிய பொதுச்செயலாளர் P.பாஸ்கர் ஆசிரியர் ஒன்றிய BJP பொருளாளர் S.சுரேந்திரன் BJP மாவட்ட செயற்குழு உறுப்பினர் P.தியாகராஜன் BJP ஒன்றிய செயளாளர் A.சரவணன் ஒன்றிய BJP இளைஞரணி தலைவர் . சக்தி கேந்திர தலைவர்கள் k.சின்னத்தம்பி R .சின்னத்தம்பி S.தங்கச்சாமி R.மாரியப்பன் S.ஜெயக்குமார் S.லெட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு வீர அஞ்சலி செலுத்தினர் 

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!
vkpudur
vkpudur

தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களுக்கு காந்தி சிலை முன்பு அஞ்சலி செலுத்தப்பட்டது

tenkasi3
tenkasi3

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி நிறுவன தலைவர் வீரத்துறவி  ராம.கோபாலன் அவர்களுக்கு சிரத்தாஞ்சலி நகரதலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்றது.

tenkasi4
tenkasi4

இந்துமுன்னணி மாவட்டதலைவர் ஆறுமுகச்சாமி முடி காணிக்கை செலுத்தினார், பொதுச்செயலாளர் மணிகண்டன் செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம்ஜி, குருவிகுளம் ஒன்றிய தலைவர் பால்மாரிஜி, சங்கரன்கோவில் ஒன்றிய பொதுச்செயலாளர் சீனிவாசன், சங்கை-குருவிகுளம் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சியில் RSS பேரியக்கத்தின் தென்காசி ஜில்லா தலைவர் திரு.கோபாலகிருஷ்ணன், BJP மாவட்டதலைவர் ராமராஜா VHP மாவட்ட தலைவர் வன்னியராஜ், செங்குந்தர் சங்க பொறுப்பாளர் மாரிமுத்து, தேவேந்திர குலவேளாளர்.  உறவின் முறை கமிட்டி தலைவர் மாரியப்பன் மற்றும் ஆகியோர் கலந்து கொண்டு சிரத்தாஞ்சலி செலுத்தினர்.

செங்கோட்டையில் ராம.கோபாலன் மறைவுக்கு தடையை மீறி மவுன ஊர்வலம் செல்ல முயன்ற 39பேர் கைது செய்யப் பட்டனர்.

senkottai-hm1
senkottai-hm1

இந்து முன்னனி தலைவர் ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவருடைய படத்திற்கு செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகில் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இந்து முன்னனி சார்பில் நகரத் தலைவர் மூர்த்தி தலைமையில் நடந்தது

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதில் மாவட்ட துணைத் தலைவர் முருகன் பாரதீய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் மாரியப்பன் நகரத் தலைவர் வேம்புராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்
சீனிவாசன். விஸ்வ ஹிந்து பர்ஷித் நகரத் தலைவர் குருசாமி உள்படபலர் கலந்து கொண்டு ராம.கோபாலன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்

senkottai-hm
senkottai-hm

பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மவுன ஊர்வலம் செல்வதற்கு முயன்றனர் அப்போது  144.தடை உத்தரவு இருப்பதை போலீசார் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அவர்களுக்குள் வாக்குவாதம்
ஏற்பட்டது

பின்பு செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் மாரிசெல்வி
சின்னதுரை மற்றும் போலீஸ்சார் மவுன ஊர்வலம் செல்ல முயன்ற 39பேரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்!

Related articles

Recent articles

spot_img