யாருமில்லா வீடு! மறைந்திருந்த நபர்! ஆபத்தில் பெண்..காப்பாற்றிய ஆப்பிள் போன்!

Published:

apple watch 1 - 2026

ஆப்பிள் வாட்ச் மூலம் ஆபத்தில் சிக்கி உயிர்பிழைத்தவர்கள் ஏராளம் என்றே கூறலாம். பல்வேறு மக்களின் உயிரை காப்பாற்றிய பெருமை கொண்ட ஆப்பிள் வாட்ச் சமீபத்தில் பெண்மணியின் உயிரை காப்பாற்றி இருக்கிறது.

கனடாவின் கல்கரி எனும் பகுதியை சேர்ச்த பெண் ஒருவர் தன்வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் மர்ம் நபர் மறைந்திருப்பதை அவர் கண்டு மிகவும் பயந்து அதிர்ந்தார். வீட்டில் யாரும் இல்லாததை உணர்த்தும், அவர் போன் மூலம் உதவி பெற முயன்றார்.

aapathu - 2026

ஆனால் அவர் அருகில் போன் இல்லாததால் அவரால் யாருக்கும் அழைக்க முடியவில்லை. பின்பு அவர் அணிந்து இருந்த ஆப்பிள் வாட்ச் கொண்டு தான் ஆபத்தில் சிக்கியிருக்கும் தகவலை தனது நண்பருக்கு உடனே தெரியப்படுத்தினார்.

மேலும் அவருடைய நண்பர் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டார். அந்த பெண்மணி வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் மர்ம நபரிடம் இருந்து அவரை மீட்டனர்.

apple watch - 2026

வீட்டில் மறைந்து இருந்தவரின் பெயர் ஜோசப் மிசின்டோ என்று தெரிவந்துள்ளது, பின்பு விசாரணையில் பெண்மணியை பாலியில் ரீதியில் அச்சுறுத்தும் நோக்கில் வீட்டிற்குள் நுழைந்ததாக ஒப்புக் கொண்டார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

ஜோசப் மிசின்டோவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பையில் கத்தி, கயிறு,ஆணுறை மற்றும் பல்வேறு பொருட்கள் இருந்தன என்றும், பின்பு அந்த பெணிமியின் வீட்டு நுழைவு அட்டை, போலி சாவிகள் உள்ளிட்டவையும் இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது.

Related articles

Recent articles

spot_img