இனி எல்லாம் தமிழில்தான்…! காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி உத்தரவு!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
jktripati - 2026

காவல்துறையில் தகவல் தொடர்பு மற்றும் கடித தொடர்பு ஆகிய அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று டிஜிபி திரிபாதி உத்தரவு இட்டிருக்கிறார்.

காவல்துறை வாகனங்கள் அனைத்திலும் தமிழில் காவல்துறை என இடம் பெற்றிருக்க வேண்டும் ; வருகை பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்று டி.ஜி.பி திரிபாதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

டிஜிபி., திரிபாதியின் திடீர் உத்தரவு இப்போது பரபரப்பாகப் பேசப் பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழில்தான் காவல்துறையினரின் அனைத்து செயல்பாடுகளும் இருக்க வேண்டும் எனும் நோக்கில், காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டிஜிபி திரிபாதி.

  • கடித பரிமாற்றம் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்
  • போலீஸ் வாகனங்கள் அனைத்திலும் தமிழில், “காவல் துறை” என இடம்பெற்றிருக்க வேண்டும்
  • வருகைப் பதிவேட்டில் கூட அனைத்து அதிகாரிகளும் தமிழில் கையெழுத்திட வேண்டும் – என்று உத்தரவிடப் பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.