தமிழ்த்தாய் வாழ்த்து ஒழுங்கா பாட துப்பில்ல… நாங்கதான்… இங்கே.. தமிழ் அண்டா குண்டானு குறுக்க மறுக்க ஓடுதுக!

அடடே... அப்படியா? புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kanyakumari - 2026

ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து ஒழுங்காக பாட துப்பில்ல.. நாங்கதான்… இங்கே.. தமிழ் அண்டா..குண்டானு குறுக்க மறுக்க ஓடுதுக.. – என்று கோபம் கொப்புளிக்க கருத்துக்களைப் பகிர்கிறார்கள் சமூகத் தளங்களில்!

காரணம் என்ன? எல்லாம் இந்த கவுன்சிலர்களின் லெவலால் வந்த பிரச்னை தான்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் நேற்று அந்தந்த மாவட்டத்தில் பதவியேற்றனர். அதே போல, கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட பேச்சுப்பாறை ஊராட்சியில் வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்குப் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பொதுவாக, தமிழகத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதே போல, அந்த நிகழ்ச்சியிலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, மைக்கைப் பிடுங்கிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஞானவேல் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடினார். அதனால், அவர் பாடுவதை நிறுத்தும் படி அங்கிருந்த அனைவரும் கூறினர்.

இது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, ‘கல்வியில் சிறந்த மாவட்டமாகக் கன்னியாகுமரி விளங்குகிறது. அங்கே தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட ஒரு ஸ்கூல் பிள்ளை கூட இல்லையா?

எல்லாம் தெரிஞ்ச மாதிரி பாடுற அந்த ஆள யாராச்சும் பார்த்தா… மண்டையில் ஒரு கொட்டு வைச்சு நூறு தடவை எழுத வையுங்க’ என்று பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

https://twitter.com/vanamadevi/status/1214510648668721152

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.