நடமாடும் பணிமனைகளும், 240 புதிய பேருந்துகளும் துவக்கி வைத்த முதல்வர்!

Published:

eps 4 - 2026

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 240 புதிய பேருந்துகளையும், திருச்சி, தஞ்சாவூரில் 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழக முதல்வர் பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 83 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 240 புதிய பேருந்துகளையும், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களையும் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
eps 1 1 - 2026

பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை – மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு 37 பேருந்துகள் உட்பட மொத்தம் 240 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் பழனிசாமி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

2018-19ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில், அரசு தானியங்கி பணிமனை இல்லாத மாவட்டங்களில் இயக்கப்படும் அரசு துறை ஊர்திகள் அருகில் உள்ள அரசு தானியங்கி பணிமனைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதனை தவிர்த்திடும் பொருட்டு தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள “அம்மா அரசு நடமாடும் பணிமனை” முன்னோட்ட அடிப்படையில் இரண்டு மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை சார்பில் முதற்கட்டமாக, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 2 அம்மா அரசு நடமாடும் பணிமனை வாகனங்களை முதல்வர் பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டிற்காக 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பேருந்து பணிமனை மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட் சார்பில் நீலகிரி மாவட்டம் – உதகையில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்பட்ட உதகை பேருந்து நிலையம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

அவசர வேலை காரணமாக உடனடியாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய பயணிகளின் வசதிக்காக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் நெடுந்தூர பேருந்துகளில் பயணிகள் இருக்கையை முன்பதிவு செய்யும் வகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் செல்லிடைப் பேசி தனிச்செயலி வழி முன்பதிவு செய்யும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களில், 36 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநனராகவும் 188 வாரிசுதாரர்களுக்கு நடத்துனராகவும் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 வாரிசுதாரர்களுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

மேலும், அரசு போக்குவரத்து கழகங்களில் 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பணிநியமனம் செய்யப்பட்ட 1,828 சேம ஓட்டுநர்கள் மற்றும் 537 சேம நடத்துனர்களில், தகுதி பெற்ற 1,112 ஓட்டுநர்கள் மற்றும் 162 நடத்துனர்களுக்கு தினக்கூலி ஓட்டுநர் மற்றும் தினக்கூலி நடத்துனர்களாக பதவி மாற்றம் செய்வதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, பழனிசாமி இன்று 7 சேம ஓட்டுநர்கள் மற்றும் சேம நடத்துனர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related articles

Recent articles

spot_img