அமர்நாத் யாத்திரை வரும் ஜுன் மாதம் தொடங்குகிறது… ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க நடைபெறும் யாத்திரை வரும் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது.
பிரசித்தி பெற்ற அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அந்த கோவிலுக்கு செல்ல சந்தன் சாடி எனும் இடம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும், அதன் பிறகு நடந்து தான் செல்ல வேண்டும்.
கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடந்து வரும் பதட்டமான சூழலால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன, இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி 42 நாட்களுக்கு நடக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை தெரிவித்து உள்ளது.
ஜம்மு காஷ்மீர் கவர்னர் கிரிஷ் சந்திர முர்மு தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, உலகப்புகழ்பெற்ற அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க மக்கள் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்த கோவிலை காண வருவது குறிப்பிடத்தக்கது.