கோமாவுல அம்மா கைநாட்டுதான் வெச்சாங்க… அன்பழகன் கையெழுத்தே போட்டுட்டாரு போல..!

Published:

dmk anbazhagan - 2026
file picture

கோமாவில் இருந்த காலத்தில் அதிமுக., பொதுச் செயலர் ஜெயலலிதா கைநாட்டு தான் வெச்சதா இவங்க பிரச்னையை கிளப்பினாங்க.. ஆனால் இவங்க கட்சி பொதுச் செயலாளரோ கோமாவுல இருக்குற காலத்துல தெள்வா சிந்திச்சி உத்தரவு பிறப்பித்து, கையெழுத்தும் போட்டு கலக்கிருக்காரு… என்று கிண்டல் அடிக்கின்றனர் அரசியல் வட்டத்தில்!

தற்போது கோமாவில் இருக்கும் திமுக., பொதுச்செயலாளர் க.அன்பழகன் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டது போல அவர் பெயரில் வெளியான அறிக்கையால் மற்ற கட்சியினர் மட்டுமல்ல, திமுக.,வினரே கடுங் குழப்பத்தில் உள்ளனர்.

anbazhagan sign - 2026

தி.மு.க., பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 97) உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவர் கோமா நிலையில் சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கமாக தி.மு.க.,வின் முக்கியமான அறிக்கைகள் அன்பழகனின் பெயரில் தான் வெளியாகும் என்ற நிலையில், இப்போது அவர் கோமா நிலையில் இருக்கிறார் என்று சொல்லப்படும் காலத்திலும் அவரது பெயரிலேயே அறிக்கை வெளியாகியுள்ளது.

இன்று காலை குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ., காலமானார். அடுத்தடுத்து இரு நாட்களில் இரு எம்.எல்.ஏ.,க்கள் உயிரிழந்த நிலையில், சனிக்கிழமை நாளை நடைபெறவிருந்த திமுக எம்.பி.,க்களின் கூட்டத்தை அக்கட்சி ஒத்திவைப்பதாக ஓர் அறிக்கை வெளியானது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இவ்வாறு வெளியான அறிக்கை கூட பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் வெளிவருகிறது. இது திமுக மீதான நம்பகத்தன்மையை குலைத்து விடுவதாகக் கூறுகின்றனர்.

முன்பெல்லாம் கருணாநிதி இருந்த போது அவர் பெயரிலும் அறிக்கை வரும். இது போன்ற முக்கிய அறிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலினோ, மேல் மட்ட தலைவர்களோகூட வெளியிடலாம். தவறில்லை. ஆனால் பத்து நாட்களாக கோமாவில் இருக்கும் ஒருவர் அறிக்கையில் கையெழுத்து போட்டு அறிக்கை வெளியிட்டார் என்பது போல அவர் பெயரில் வெளியாகியிருப்பது கட்சித் தொண்டர்களை ஏமாற்றும் செயல்.

இதற்கும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடைத்தேர்தலின் போது, தீவிர சிகிச்சையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விரல் ரேகை பதிவு செய்தார் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை…. என்கின்றனர்.

ஒரு வேளை திமுக., பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தியது போன்று… அன்பழகனிடமும் கையெழுத்து இயக்கம் நடத்தி விட்டார்களோ என்னவோ?!

Related articles

Recent articles

spot_img