ஆர்.எஸ்.பாரதி சொன்னார்ல..! – இப்படிக்கு மக்கள் டிவி ஓனர்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
dmk rsbarathi - 2026

ஆர்.எஸ்.பாரதி ஊடகத்துறையினர் குறித்து கொச்சையாகப் பேசியதை தற்போது தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டு ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்.

ஆர்.எஸ்.பாரதி கருத்துக்கு பாஜக.,வினரே அரசியல் ரீதியில் அதிக அளவில் எதிர்ப்புகளைத் தெரிவித்தார்கள். இவ்வளவுக்கும் பாஜக.,வினருக்கு சொந்தமாக ஊடகங்கள் இல்லை. இந்த நிலையில் பாமக நிறுவுனரும் மக்கள் தொலைக்காட்சியை நடத்தி வருபவருமான டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்… காசுக்காக எதைப்பற்றி வேண்டுமானாலும் கிளப்பி உடுவானுங்க… – என்று!

அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் டிவிட்டர் பதிவில் கலந்து காணப்படுகிறது. அவரது பதிவு…

ஊடகத்துறையினருக்கு சமர்ப்பணம்:
பாரதி உதிர்த்த முத்து : ’’இந்த டிவிகாரனுங்க இருக்கிறானுங்க பாருங்க, அவனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும் கிடையாது. ரெட்லைட் ஏரியா போன்று தான் டிவிய நடத்துறானுங்க. காசுக்காக எதைப்பற்றி வேண்டுமானாலும் கிளப்பி உடுவானுங்க!’’

https://twitter.com/Shaline2ee/status/1234726272879730688
ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.