ரஜினியின் ‘அரசியல்’ அறிவிப்புக்குக் காரணம்.?!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vaiko rajini - 2026

இன்றைய ஊடகங்களில் பரபரப்பு கிளப்பியது ரஜினியைக் குறித்த அரசியல் பிரசவ செய்திதான்! பிரவேசம் இருக்கா இல்லையா என்பதே இப்போது விவாதக் களமாகிவிட்டதால், பிரசவமும் கேள்விக்குறியாகி விட்டது!

எனக்கு இப்போதே 71 வயதாகிவிட்டது. இப்போது விட்டால் அடுத்த முறை பிடிக்க முடியும் என்ற நிலையில் நான் இல்லை. நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது மாநில கட்சி ஆட்சியைப் பிடித்த மண் இந்த மண். மக்கள் எழுச்சி, புரட்சிக்கு முன் பணபலம், ஆள்பலம் தூள் தூளாகும். தமிழகத்தில் புரட்சி வெடிக்க வேணடும். பதவி மீது ஆசையில்லாதவர்களே எனக்கு வேண்டும். தமிழகத்தின் மூலை, முடுக்கெல்லாம் புரட்சி வெடித்த பின் நான் வருகிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார் ரஜினி!

மறைந்த தலைவரகளின் பிறந்தநாள், நினைவுநாளுக்கு ஆட்சியில் இருப்பவர்கள் வரத்தேவையில்லை. கட்சியிலிருப்பவர்கள் வந்தால் போதும். இதுதான் மாற்று அரசியல் எம்.எல்.ஏ, எம்.பியாக ஒருவரை ஆக்கி அழகு பார்ப்பது என்பது அரசியலில் எனக்கு பிடிக்காத வார்த்தை! தலைவன் சொல்வதை கேட்பவனே தொண்டன். தொண்டர்கள் சொல்வதை கேட்பவன் தலைவனல்ல! அரசியலில் பணம், பதவி, பெயருக்கு நான் வரவில்லை என 2017 டிசம்பரிலேயே கூறிவிட்டேன் நல்ல தலைவர்களை உண்டாக்குபவர்களே நல்ல தலைவர்கள். எனக்கு பிடித்த தலைவர் பேரறிஞர் அண்ணா என்று கூறியிருக்கிறார் ரஜினி.

அசுர பலம் கொண்ட இரண்டு ஜாம்பவான்களுடன் மோதப் போகிறோம் என்று பீடிகை போட்டு இழுத்த ரஜினி, அடுத்து வாக்கு அளித்தவர்களின் மனநிலையையும் சேர்த்துச் சொன்னார். 30% திமுகவிற்கு வாக்களித்தார்கள் 70% கருணாநிதிக்கு வாக்களித்தார்கள். 30% அதிமுகவிற்கு வாக்களித்தார்கள் 70% ஜெயலலிதாவிற்காக வாக்களித்தார்கள். வெற்றிடம் என்பது இந்த ஆளுமைமிக்க தலைமைக்குத்தான் உருவாகியுள்ளது. நான் வெறுமனே ஆட்சி மாற்றத்திற்கு வரவில்லை.அரசியல் மாற்றத்தை உண்டு செய்ய விரும்புகிறேன். இப்போது வரவில்லை என்றால் இனி எப்போதும் அந்த மாற்றம் வராது… என்று உறுதிபடக் கூறியுள்ளார் ரஜினிகாந்த்!

  • சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுதாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும்
  • தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் இப்பொழுது இல்லை என்றால் இனி எப்போதும் வாய்ப்பில்லை
  • இளைஞரிடம் எழுச்சி ஏற்பட்ட பின்பு அரசியலுக்கு வருவேன்
  • சும்மா 10% அல்லது 15% ஓட்டை பிரித்து பேரம் பேச அரசியலுக்கு வர நான் விரும்பவில்லை
  • மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் நான் கட்சி துவக்குவது தேவையற்றது
  • அதிமுக கட்டமைப்பு மற்றும் குபேர கஜானா பலம் .. திமுக வாழ்வா சாவா போட்டி ஆள் பலம் பணபலம் கட்டமைப்பு பலம்
  • இந்த அசுர பலத்திற்கு இடையில் என்னை நம்பி வரும் ரசிகர்களை பெரியவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை
  • இளைஞர் மத்தியில் எழுச்சி ஏற்பட்டால் அசுர பலத்தை தூள் தூள் ஆக்கலாம். அது ஏற்படும் என நம்புகிறேன்.
  • இவ்வளவு தூரம் ரஜினிகாந்த் பேசியதற்குக் காரணம் என்ன தெரியுமா?! இந்தச் செய்தியின் படம் சொல்லும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.