மாஸ்க் அணிந்து நடக்கும் குரங்கு! வைரல் வீடியோ!

அடடே... அப்படியா? லைஃப் ஸ்டைல்
monkey

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முதல் வழியாக சுகாதார வல்லுநர்களும், அரசாங்கங்களும் பரிந்துரைப்பது முகக்கவசம் எனச் சொல்லப்படும் மாஸ்க் அணிவதுதான்.

இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டைவிட்டு வெளியே வரும் எந்தவொரு நபரும் முகக்கவசம் அணிந்துதான் பொது இடங்களுக்கு வர வேண்டும் என்று விதிமுறையே நடைமுறையில் உள்ளது.

ஒவ்வொருவரும் மாஸ்க் அணிவதன் மூலம் கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றை வெகுவாக குறைக்க முடியும் என்று பல ஆய்வு முடிவுகள் சொல்லி வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், குரங்கு ஒன்று மாஸ்க் போன்று துணியை அணிந்து செல்லும் வீடியோ பலருக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது. 

வீடியோவில் ஒரு குரங்கு, சாலையில் கிடக்கும் துணியை எடுக்கிறது. அதை அப்படியே முகத்தைச் சுற்றி மாஸ்க் போன்று அணிகிறது. பின்னர், மனிதர்கள் போல அதனுடனேயே நடந்து செல்கிறது. கொரோனா வைரஸ் காலத்தில் இதைப் போன்ற ஒரு வீடியோவைப் பார்க்கும்போது, பலருக்கு அது புன்முறுவலைக் கொடுத்துள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.