தில் பேச்சாரா படத்தின் மீதும் அன்பு மழை பொழிகிறது
ஜான் கிரீன் எழுதிய தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ் என்கிற நாவலை மையமாகக் கொண்டு தில் பேச்சாரா என்கிற ஹிந்திப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சுசாந்த் சிங், சஞ்சனா சங்கி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – ஏ.ஆர். ரஹ்மான்.

தில் பேச்சாரா, ஜூலை 24 அன்று ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுசாந்த் சிங்குக்காக இந்தப் படம் அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா்.

இப்படத்தின் டிரெய்லர் இரு நாள்களுக்கு முன்பு வெளியானது.
யூடியூப் தளத்தில் வெளியான டிரெய்லர்களில் உலகளவில் அதிகம் பேர் விரும்பிய டிரெய்லராக தில் பேச்சாரா சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு யூடியூபில் வெளியான அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் படத்தின் டிரெய்லருக்கு 36 லட்சம் பேர் லைக் செய்து ஆதரவளித்துள்ளார்.

ஆனால் முதல் 24 மணி நேரத்தில் தில் பேச்சாரா பட டிரெய்லருக்கு 2.94 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. 60 லட்சம் பேர் லைக் செய்து ஆதரவளித்துள்ளார். இதன்மூலம் யூடியூப் தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது சுசாந்த் சிங் நடித்த தில் பேச்சாரா பட டிரெய்லர். இதற்கு முன்பு யூடியூபில் இந்திய அளவில் அதிக லைக் வாங்கிய டிரெய்லராக விஜய் நடித்த பிகில் இருந்தது. அந்தப் பட டிரெய்லருக்கு 23 லட்சம் லைக் கிடைத்திருந்தது. அந்தச் சாதனையையும் தில் பேச்சாரா தாண்டியுள்ளது.

தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் உலகளவில் சாதனை படைத்துள்ளதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். சுசாந்த் சிங் மீதும் தில் பேச்சாரா படத்தின் மீதும் அன்பு மழை பொழிகிறது என்று அவர் கூறியுள்ளார்
ஜூலை 6-ம் தேதி ‘தில் பெச்சாரா’ ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்த ட்ரெய்லரைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
It’s raining love for Sushant and #Dilbechara ?♥️?☔️ https://t.co/LBrjdwkgHv
— A.R.Rahman (@arrahman) July 7, 2020
It’s raining love for Sushant and #Dilbechara ?♥️?☔️ https://t.co/LBrjdwkgHv
— A.R.Rahman (@arrahman) July 7, 2020
It’s raining love for Sushant and #Dilbechara ?♥️?☔️ https://t.co/LBrjdwkgHv
— A.R.Rahman (@arrahman) July 7, 2020
[embedded content]



