த்ரிஷா திருமண சீகரெட்..! ஜோடி யாரு தெரியுமா?

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

trisha
trisha
  • த்ரிஷாவுக்கு கெட்டிமேளம் கொட்ட இருக்கிறது!
  • விவாதத்திற்கு பெயர்போன ஹீரோவோடு திருமணம் நிச்சயம்.
  • சைலண்டாக அனைத்தும் ரெடி.

தென்னிந்தியாவின் ஸ்டார் ஹீரோயின் திரிஷா ஒருவழியாக மணமேடை ஏற இருப்பதாக தெரிகிறது.

கோலிவுட் ஸ்டார் ஹீரோவான சிம்புவோடு அவருடைய திருமணம். திருமணத்திற்கு சைலண்டாக அனைத்து ஏற்பாடுகளும் நடப்பதாக டாக்.

டாலிவுட் மோஸ்ட் எலிஜிபுள் லேடி பேச்சிலர் லிஸ்டில் திரிஷா பெயர் முக்கியமாக கூறலாம் . 37 வயது வந்தாலும் அழகு குறையாமல் சவுத் இந்தியன் ஆடியன்சை மகிழ்வித்து வரும் இந்த அழகி இன்னும் திருமண மேடை ஏறவில்லை .

கடந்த காலத்தில் ஒரு முறை திருமண மேடையேறும் வாய்ப்பு ஏற்பட்டாலும் சில காரணங்களால் அது நடக்கவில்லை. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியனோடு எங்கேஜ்மென்ட் கூட நடத்திக் கொண்டு திருமணத்தை கேன்சல் செய்தார் திரிஷா.

அதன்பின் சிறிது ஆண்டுகள் திருமண எண்ணத்தை ஒதுக்கி வைத்திருந்தார். ஆனால் புதிதாக கோலிவுட் வட்டாரத்திடமிருந்து காதில் விழும் செய்தியின்படி திரிஷா திருமணம் ஒரு ஸ்டார் ஹீரோவோடு ஃபிக்ஸ் ஆகி இருப்பதாக தெரிகிறது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
trisha
trisha

தென்னிந்திய திரை உலகை கடந்த 18 ஆண்டுகளாக ஆண்டு வரும் தெலுங்கு தமிழ் மொழிகளில் உள்ள அனைத்து உயர் ஹீரோக்களுடனும் ரொமான்ஸ் செய்த திரிஷா கடந்த சில காலமாக சினிமாக்களை குறைத்துக்கொண்டார். அதனால் இவருடைய பார்வை திருமணத்தின் மீது விழுந்தது என்றும் அதனால்தான் சினிமாக்களை குறைவாக செய்து வருகிறார் என்றும் டாக் நடந்துவந்தது.

அதன்படி இவர் தென்பட்ட ஒவ்வொரு இன்டர்வியூவிலும் திருமணம் குறித்து கேள்விகளை எதிர்கொண்டார் திரிஷா. ஆனால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் கூறியது ஒன்றேதான். “பிடித்த ஆண்மகன் கிடைத்தால் லாஸ்வேகாசிலேயே திருமணம் செய்து கொள்வேன்” என்பார்.

இந்த பின்னணியில் திரிஷா ஆசைப்பட்டபடி ஒரு ஆண்மகன் அவருக்கு மிகவும் பிடித்து விட்டார் என்றும் அவர் வேறு யாருமல்ல கோலிவுட் ஸ்டார் ஹீரோ சிம்பு தான் என்றும் செய்திகள் ஹாட் டாபிக்காக மக்களிடையே சுற்றிவருகிறது.

தமிழ் சினி வட்டாரங்கள், மீடியா ‘கதை’களின் படி ஹீரோ சிம்புவோடு திரிஷா திருமணம் நிச்சயமாகி விட்டதாக தெரிகிறது. ஆயின், ஹீரோ சிம்பு கடந்த காலத்தில் ஹீரோயின்களுடன் நடத்திய பிரேமாயணம் அனைவருக்கும் தெரிந்ததே. முதலில் நயன்தாராவுடன் சுற்றிவந்தார் இந்த ஹீரோ. அதன்பின் ஹன்சிகாவோடு பிரேமாயணம் நடத்தி தோல்வி கண்டார்.

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இத்தனை நடந்தது தெரிந்தாலும் கடந்த சில நாட்களாக திரிஷா சிம்புவோடு காதலில் விழுந்து விட்டார் என்றும் இவர்களின் திருமணத்திற்கு பெரியவர்களிடம் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டது என்றும் முகூர்த்தம் தேதி குறிக்கும் யோசனையில் உள்ளார்கள் என்றும் மீடியாவில் பெரிய அளவில் ‘கதை’கள் உலா வருகின்றன.

trisha-simbu
trisha-simbu

திரிஷா, சிம்பு ஜோடியாக விண்ணைத்தாண்டி வருவாயா, அலை திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்கள். இந்த இரண்டு சினிமாக்களும் சூப்பர் ஹிட் ஆயின.

தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா சீக்வெலில் மீண்டும் இந்த இருவரும் ஜோடி சேரப்போவதாக தெரிகிறது.

பார்ப்போம்… பொறுத்திருந்து பார்ப்போம்… திரிஷா, சிம்பு திருமணச் செய்திகளுக்கு இவர்கள் இருவரில் யாராவது பதில் கூறுகிறார்களா? இந்தச் செய்தியில் உண்மை உள்ளதா இல்லையா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.!

Related articles

Recent articles

spot_img