தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்வு அடைந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு 88,377 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 75 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்வு கண்டுள்ளது.

அதே நேரம், தமிழகத்தில் ஒரே நாளில் 4,894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதை அடுத்து, கொரோனாவில் இருந்து விடுபட்டு, இதுவரை வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் விவரம்:

districtwise-corona-affected-cases-july21
districtwise-corona-affected-cases-july21

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.