எஸ்பிஐ அக்கௌன்ட் உள்ளவரா? இந்த அதிரடி ஆபர் பற்றி தெரியுமா?

அடடே... அப்படியா? சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்
sbi

இந்தியாவில் மிகச்சிறந்த வங்கி சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பல்வேறு சிறப்பு சலுகைகளை முன் வைத்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்கள் ஏனைய வங்கி ஏஎடிஎம்-களில் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக பணம் எடுத்து வருகின்றனர்.

ஆனால் இது ஒருவர் தன் கணக்கில் ஒரு குறைந்த பட்ச தொகை வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை இனி செய்து கொள்ளலாம்.

மேலும் ரூ.25000 மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம். அதேபோன்று 1லட்சம் அல்லது அதற்கு மேல் மினிமம் பேலன்ஸ் வைத்திருப்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில், ரூ.25,000க்கும் குறைவாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம் என மேலும் தன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள் எஸ்.பி.ஐ வங்கியில் உள்ளன.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

முன்னதாக 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்புத் தொகை வைத்திருக்கும்போது அதன் வட்டி விகிதம் 3.25 சதவீதமாகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது எஸ்பிஐ வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு 3.5 சதவீத வட்டி விகிதம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.