அந்த கொலைகாரனை கை கால் வெட்டி எங்க முன்னாடி தூக்குல போடுங்க: அதிரும் ஐதராபாத்!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
hyderabad priyanka justice rally - 2026

இளம் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டியின் மோசமான மரணம், இன்று ஐதராபாத்தை அதிர வைத்திருக்கிறது. ஐதராபாத் அல்லோலகல்லோலப் படுகிறது.

ஐதராபாத்தின் ஷம்ஷாபாதில் பெரிய அளவில் கண்டனப் பேரணி நடைபெற்று வருகிறது உள்ளூர் வாசிகள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பெருமளவில் பெண்கள் திரண்டு, பிரியங்கா ரெட்டியை சிதைத்து தீயிட்டுக் கொன்றவனை பொதுமக்கள் மத்தியில் கை கால்களை வெட்டி, தூக்கில் போட வேண்டும்; தண்டனை கடுமையாக இருந்தால்தான் இது போன்ற சதிகளைச் செய்ய மாட்டார்கள், பயம் வரும் என்று கோஷம் எழுப்புகின்றனர்.

ஷம்ஷாபாத் பேரணியில் செல்பவர்கள், வீ வாண்ட் ஜஸ்டிஸ், நாங்கள் நீதியை எதிர்பார்க்கிறோம் என்று முழக்கமிட்டுச் செல்கின்றனர்.

இதனிடையே, பிரியங்கா ரெட்டியை சிதைத்து எரித்துக் கொன்றதாகக் கைது செய்யப் பட்டுள்ள லாரி ஓட்டுநர் மொஹம்மத் பாஷாவின் தாய் செய்தியாளர்களிடையே பேசிய போது, என் மகன் தப்பே செய்திருந்தாலும் அவனை ஒண்ணும் செய்துடாதீங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்.

இந்தக் காட்சிகள் ஹைதராபாத் நகரில் அனைத்து உள்ளூர் சேனல்களிலும் தொலைக்காட்சிகளிலும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றைக் காணும் பொதுமக்கள் பலரும் அரபு நாடுகளில் உள்ள தண்டனையைப் போல் குற்றவாளி பாஷாவுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பொருமித் தள்ளுகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

தொடர்புடைய செய்திகள்: இதையும் படிங்க…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.