November 29, 2021, 11:07 am
More

  என்ன கொடூரம்!? ஸ்கூட்டி பஞ்சர்… சிக்கிய இளம்பெண் டாக்டரை சிதைத்து எரித்த லாரி டிரைவர்கள்!

  இரண்டு லாரிகளுக்கிடையே இரவு தனியாக சிக்கிய பெண்ணை லாரி டிரைவர்களான மனித மிருகங்கள் பலாத்காரம் செய்த தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

  IMG 20191129 WA0010 - 1

  ஹைதராபாத்தை உலுக்கிய தினம். இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை .

  டாக்டர் பிரியங்கா ரெட்டி உயிரோடு எரித்துக் கொலை. லாரி டிரைவர்களின் வேலை?

  லாரி டிரைவர்களே அவரை சிதைத்து பின்னர் கொன்றுவிட்டனராம்!

  ஷாத்நகரில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட டாக்டர் ப்ரியாங்கா ரெட்டி விவகாரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பிரியங்கா உடல்நிலை சிகிச்சைக்காக நேற்று மாலை மாதாபூர் மருத்துவமனைக்குச் சென்றார்.

  திரும்பி வரும்போது அவருடைய ஸ்கூட்டி ரிப்பேர் ஆகிவிட்டது.

  அது குறித்து அவர் தன் தங்கைக்கு போன் செய்து தெரிவித்தார். அங்கே சுற்றிலும் நிறைய லாரி டிரைவர்கள் தென்படுகிறார்கள் என்றும் தனக்கு பயமாக இருப்பதாகவும் போனில் தங்கையிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார். பின்னர் மறுபடியும் போன் செய்வதாக கூறியுள்ளார். ஆனால் அதன்பின் அவர் போன் ஸ்விட்சாஃப் ஆகியிருந்தது.

  IMG 20191129 WA0011 - 2

  இரவு முழுவதும் பிரியங்கா வீட்டிற்கு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

  ஷாத்நகரில் ஒரு இளம்பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து போன நிலையில் உள்ளது என்று அறிந்த போலீசார் பிரியங்காவின் குடும்பத்தாருக்கு செய்தி தெரிவித்தனர் .

  சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் அந்த உடல் பிரியங்கா ரெட்டி உடல்தான் என்று அடையாளம் கண்டனர் .

  ஆயின் அவரைக் கொன்றது யார் என்பது பற்றி பல சந்தேகங்கள் எழுந்த நிலையில் அருகிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் பிரியாங்காவின் போன் கால்களையும் பரிசீலிக்கும் பணியில் இறங்கினர் போலீசார் .

  அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பிறகு எரித்துக் கொன்றுள்ளதாக போலீசார் கருதினர்.

  ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் கொலைக்கு ஆளான வெடரினரி டாக்டர் பிரியாங்கா ரெட்டி கொலை விவகாரத்தில் புது விஷயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

  IMG 20191129 WA0009 - 3

  இரவு 9.45 மணிக்கு பிரியங்கா தன் தங்கையோடு போனில் பேசியுள்ளார். அதன்பின் சில கணங்களிலேயே போன் சுவிட்சாஃப் ஆகி விட்டது என்று டிசிபி ப்ரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.

  கிட்நாப் செய்து கொன்றுள்ளதாக தகவல் வெளியானது

  சிசிடிவி காட்சிகளை பரிசீலித்த போலீசார் குற்றவாளிகளை பிடிப்பதற்கு 10 குழுக்களை களத்தில் இறக்கினர்.

  ஸ்கூட்டி பார்க்கிங் செய்த இடம், பங்க்சர் செய்வதற்கு வந்த மனிதர் போன்ற தகவல் களை பரிசீலிப்பதாக தெரிவித்தார்.

  எப்போதும் போலவே புதன்கிழமையும் தன் ஸ்கூட்டியில் பிரியங்கா வெளியில் சென்றார். திரும்பி வரும் வழியில் ஸ்கூட்டி ரிப்பேர் ஆனது. அதனால் பயந்து போய் தனக்கு போன் செய்ததாக அவர் தங்கை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  அங்கு நின்றிருந்த லாரி டிரைவர்கள் ஸ்கூட்டியை ரிப்பேர் செய்வதாக எடுத்துச் சென்று… கடைகள் எல்லாம் மூடி இருப்பதாக கூறி திரும்பி எடுத்து வந்தார்கள் என்றும் தன் தங்கையிடம் தெரிவித்துள்ளார் பிரியங்கா.

  பயமாக இருந்தால் அங்கே நிற்காமல் அருகே உள்ள டோல் கேட் அருகில் போகச் சொல்லி தான் சொன்னதாகவும் தங்கை தெரிவித்தார்.

  லாரி டிரைவர்கள் அதிகம் நடமாடும் இடம் என்பதால் அவர்கள் மேல் சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

  பெற்றோரும் உறவினரும் பிரிங்கா போன் செய்த இடத்திற்கு வந்து இரவில் அருகில் எங்கும் தேடியுள்ளார்கள். அவளை எங்கும் காணாமல் போகவே விடிகாலை மூன்று மணிக்கு போலீசில் புகார் கொடுத்தார்கள்.

  முகப்பரு டிரீட்மென்டுக்காக மருத்துவமனை சென்றுவந்த போது நடந்த கொடூரம் இது.

  இரண்டு லாரிகளுக்கிடையே இரவு தனியாக சிக்கிய பெண்ணை லாரி டிரைவர்களான மனித மிருகங்கள் பலாத்காரம் செய்த தடயங்களை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கேயே அவளைக் கொன்று பின் மேம்பாலம் அருகே தூக்கிச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்து தடயங்களை அழித்துள்ளனர் என்று போலீசார் தெரிவிக்கினறனர்.

  ஹைதராபாத் நகரில் எங்கும் இதே பேச்சாக உள்ளது. எந்த இருவர் சந்தித்தாலும் பெரிதும் வருத்தப்பட்டு மன பாரத்தில் அழுந்தி இந்த துயர சம்பவம் குறித்து பேசிக்கொள்கின்றனர்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  45FollowersFollow
  74FollowersFollow
  1,752FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-