கொந்தகையில் முழு மனித எலும்புக்கூடு!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0812_213915

கொந்தகையில் முதன் முறையாக முழு அளவிளான மனித எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் 6 ஆம் கட்ட அகழாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை கொந்தகையில் நடந்த அகழாய்வில் 14 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் நான்கில் இருந்த எலும்பு துண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளின் எலும்பு துண்டுகள் மரபணு ஆய்விற்காக மதுரை காமராஜர் பல்கலைக்ககழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Screenshot_2020_0812_213858
Screenshot_2020_0812_213858


கொரானோ காரணமாக எலும்புகளின் ஆய்வு பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் கொந்தகையில் மேலும் ஐந்து அடி நீளமுள்ள எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டறியப்பட்டு வந்தநிலையில் தற்போது 5 அடி உயர மனித (பெரியவர்) எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

எலும்பு கூடு சிதிலமடையாமல் முழுமையாக உள்ளதால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் எலும்பு கூட்டின் காலத்தை கண்டறிய வாய்ப்புள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.