ஓய்வு பெறும் நாளில் கோவிட் சென்டர் லைசன்ஸ்களை ரத்து செய்த… சர்ச்சை அதிகாரி!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
covid-centre
covid-centre

பதவி ஓய்வு பெறும் நாளில் அனைத்து கோவிட் சென்டர் லைசென்ஸ்களையும் ரத்து செய்தார் முன்னாள் டிஎம்ஹெச்ஓ. இந்த உத்தர மீது பரபரப்பு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விஜயவாடா நகரத்தில் உள்ள அனைத்து தனியார் கோவிட் மையங்களின் லைசென்ஸ்களையும் ரத்து செய்து முன்னால் டிஎம்ஹெச்ஓ உத்தரவிட்டதன் மீது பரபரப்பு விமர்சனங்கள் எழுகின்றன.

விஜயவாடாவில் உள்ள 22 கோவிட் சென்டர்களில் 9 சென்டர்களை அரசாங்கம் இதற்கு முன்பே ரத்து செய்திருந்தது. டாக்டர் ரமேஷ் மீதி உள்ள 13 கோவிட் சென்டர்களின் அனுமதியை ரத்து செய்து நான்கு நாட்களுக்கு முன்பு ஆகஸ்டு 31ஆம் தேதி உத்தரவிட்டார்.

அனுமதி அளித்த அவரே ஓய்வு பெறும் நாளன்று அவற்றை ரத்து செய்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

covid-centre1
covid-centre1

கோவிட் சென்டர்களின் அனுமதியில் லட்சக்கணக்கான ரூபாய்கள் கைமாறி உள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது. இதன் தொடர்பாக முழு விவரங்கள் இன்னும் தெரிய வேண்டி உள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.