தமிழகத்தில்… 13 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
corona virus

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 743 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இன்று சுகாதாரத் துறை வெளியிட்ட அறிகையின் படி, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,191 ஆக உயர்வு கண்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 557 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சென்னையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,228 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 987.

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் திரும்பிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 83 பேர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

corona may 20a - 2026
corona may 20c - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.