spb-in-ventilator

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி அவரின் சிகிச்சை பெற்று வருகிறார்.

2 நாட்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பாகவும், தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட வருவதாக செய்திகள் வெளியானது.

இது, இசை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, இவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

அன்று மாலை அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘ என் அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. அவரது இதயம் மற்றும் நுரையீரல் நன்றாக இயங்குகிறது. நேற்றை விட அவர் இன்று நன்றாகவே இருக்கிறார். அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது தினமும் அப்டேட் கொடுக்கும் விஷயம் அல்ல. அவரின் உடல் நிலை மெதுவாகத்தான் சரியாகும்’ எனக்கூறியிருந்தார்.

ALSO READ:  விநாயகர் சதுர்த்தி நேரத்தில் இடைத்தேர்தல்; மாற்றி அறிவிக்க இந்து முன்னணி கோரிக்கை!

எஸ்.பி.பியின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்காக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் நீண்ட நாட்களுக்கு அவருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படவேண்டும் என்பதால் மருத்துவமனையின் 3வது மாடியில் MICU எனப்படும் மிகவும் தீவிரமான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது 6வது மாடியில் அவருக்கென பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட அறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அவரின் மகன் சரண் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் ‘ என் தந்தை முன்பை விட தற்போது நலமாக இருக்கிறார். கண்கள் திறந்து பார்க்கிறார். எங்களில் சிலரை அவர் அடையாளம் காண்கிறார். தற்போது மூச்சுத்திணறல் எதுவுமில்லை. அதே நேரம் அவர் இன்னும் சில நாட்கள் அல்லது ஒரு வாரம் சிகிச்சை பெறுவார்

.அதன்பின் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும், மருத்துவர்களுக்கு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி. தொடர்ந்து பிரார்த்திப்போம்’ என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending